கருணாநிதி நினைவிடத்தில் பேனா சிலை.. மை இல்லாத பேனாவை வைப்பதால் யாருக்கு பயன்?.. கிருஷ்ணசாமி தாக்கு
சேலம்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனாவை சிலையாக வைக்கும் விவகாரத்தில், "மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை" என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடியில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நாட்டையே உலுக்கியுள்ளது. திமுக அரசின் செயல்பாடுகள் சரியில்லை.
இதனால்தான் கலவரம், வன்முறை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவே இல்லை.

ரூ 1000 நிதி எங்கே
குறிப்பாக பெண்களுக்கு உரிமை தொகை ரூ 1000 வழங்கப்படவில்லை. இதை கேட்டால் வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை என்கிறார்கள். பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி இல்லை. ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வைக்க மட்டும் எங்கிருந்து நிதி வருகிறது.

மை இல்லாத பேனா
மை இல்லாத பேனாவை சிலையாக வைப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. கடவுள் மறுப்பு உள்ளிட்டவை திராவிடத்தில்தான் உள்ளன. திராவிட மாடல் என்பதே இந்து மக்களுக்கு எதிராக செயல்படுவதுதான். ஆன்மீக அரசியல் எதிர்ப்பு கொள்கைதான் திமுகவில் உள்ளது என கிருஷ்ணசாமி பேசியிருந்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிறந்த எழுத்தாளர், வசன கர்த்தா, இலக்கியவாதி, பேச்சாளர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளுடன் இருந்தவர். அவரையும் பேனாவையும் பிரிக்க முடியாது என்ற அளவுக்கு அவருக்கு எழுத்து மீது அதீத ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் மெரினா கடற்கரையில் உதயசூரியன் வடிவில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் அமைக்கப்படுகிறது.
Recommended Video

ரூ. 80 கோடியில் பேனா சிலை
இந்த பணிக்கு ரூ 80 கோடி செலவிடப்படுகிறது. சுமார் 134 அடி உயரத்திற்கு இந்த பேனாவை அமைக்க திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் இருவேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஒன்று இது தேவையற்ற வீண் செலவு என்கிறார்கள். மற்றொன்று கடற்கரையில் இது போல் நினைவுச்சின்னம் அமைப்பது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்க்கிறார்கள்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications