சர்ரு புர்ருனு லாரியும் காரும் போகுது! நடுரோட்டில் சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங்! கோச் மீது வழக்கு
சேலம்: சென்னை- சேலம் நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்த பயிற்சியாளர் பிரபாகரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில் இருந்து ஆண்டலூர் கேட் வரை எப்போதும் டிராபிக் அதிகமாகவே இருக்கும். இந்த சாலையில் கனரக வாகனங்கள், பைக்குகள், இலகு ரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும்.

இப்படிப்பட்ட ஆபத்தான சாலையில் சிறுவர்கள் ஸ்கேட்டிங் சென்ற வீடியோ வைரலானது. பொதுவாக ஸ்கேட்டிங்கிற்காக தனி மைதானம், பூங்கா, தனிப்பட்ட இடவசதி என இருக்கும். ஆனால் நேற்றைய தினம் சிறுவர்களுக்கு சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் பயிற்சி அளிக்கப்பட்டது.
நடுரோட்டில் சிறுவர்கள் தத்தி தடுமாறி ஸ்கேட்டிங் செய்தனர். அப்போது லாரிகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் என சரமாரியாக சென்றுக் கொண்டிருந்ததன. அந்த லாரிகளுக்கு பக்கத்திலேயே இவர்களும் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
சிறுவர்கள்தானே சற்று தடுமாறியிருந்தால் பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கும். அவ்வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட இந்த மாணவர்களை பார்த்து சற்று அச்சமடைந்தனர். இதையடுத்து அந்த வீடியோ வைரலான நிலையில் ஆபத்தான முறையில் 12 சிறுவர்களுக்கு ஸ்கேட்டிங் பயிற்சி கொடுத்ததாக பயிற்சியாளர் பிரபாகரன் (29) மீது மல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications