Mettur Dam: 5வது முறையாக.. முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை! 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சேலம்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ள. அணைகளில் இருந்து நீர் அதிக அளவில் வெளியேற்றப்பட்டதால் மேட்டூர் அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியிருப்பதால் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே சேலம், ஈரோடு, நாமக்கல் என 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

கனமழை
நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழையின் அளவு அதிகரித்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. எனவே அணையின் நீர்மட்டம் அதிகரித்து முழு கொள்ளவை எட்டியிருக்கிறது. எனவே அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வந்து சேர்கிறது. இதனால் மேட்டூர் அணை இந்த ஆண்டில் தற்போது 5வது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 120.9 அடியாக அதிகரித்ததால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது.
நீர்வரத்து
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,16,683 கன அடியாக அதிகரித்துள்துள்ளது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 21,300 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 68,700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 93.61 டிஎம்சியாக உள்ளது.
அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகிறது. இங்கு பவானி ஆறு, காவரியுடன் கலக்கிறது. இங்கிருந்து பயணித்து நாமக்கல் வழியாக பாய்ந்து கரூர் வந்தடைகிறது. இங்கு அமராவதி ஆறு காவிரியுடன் கலக்கிறது. பின்னர் திருச்சி நோக்கி பாயும் காவிரி முக்கொம்பில் கொள்ளிடம், காவிரி என இரண்டாகப் பிரிகிறது.
டெல்டா மாவட்டங்கள்
ஒரு பிரிவு டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை வழியாக பயணித்து கடலில் கலக்கிறது. கொள்ளிடம் ஆறு, அரியலூர், கடலூர் வழியாக பயணித்து வங்க கடலில் கலக்கிறது. போகும் வழியெல்லாம் பசுமையை போர்த்தி செல்லும் காவிரி, டெல்டா மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. அதே நேரம் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
உயிரிழப்புகள்
டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றின் கிளை ஆறுகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆற்றில் குளித்த சிறுவர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகியுள்ளனர். இந்த சம்பவங்களை தவிர்க்கவே ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனவே கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications