மேட்டூர் அணை நீர்மட்டம் 51 அடியாக சரிவு.. ஏமாற்றிய பருவமழை.. கவலையில் காவிரி டெல்டா விவசாயிகள்
சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. பருவமழை குறைந்து போன நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவடைந்து வருவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நேற்று 1109 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்றே உயர்ந்து விநாடிக்கு 2000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காகவும் பாசனத்திற்காகவும் விநாடிக்கு 8000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 52.50 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 51.95 அடியாக குறைந்தது. இதேநிலை நீடித்தால் இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. வழக்கமாக பருவமழை ஜூன் மாதம் தொடங்கிய உடன் கேரளாவிலும் கர்நாடகாவிலும் அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். கேரளா, கர்நாடகாவில் நடப்பாண்டு பருவமழை குறைவாகவே பெய்துள்ளது. கர்நாடகா அணைகளில் தண்ணீர் இருந்தாலும் தற்போது குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நடப்பாண்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் நெற்பயிர்கள் பல இடங்களில் கருகத் தொடங்கியுள்ளன. ஆற்று நீரை நம்பியுள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறுவை சாகுபடிக்கே தண்ணீர் இல்லாத நிலையில் சம்பா, தளாடி பயிர் சாகுபடியை எப்படி தொடங்குவது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கேரள மாநிலத்திலும் பருவமழை குறைவாக உள்ளதால் முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமும் சரிவடைந்து வருகிறது. இதன் காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீரை நம்பி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications