பொங்கி வரும் காவேரி.. ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி.. மேட்டூர் அணை எப்போது நிரம்பும்

Subscribe to Oneindia Tamil

சேலம்: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 12,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. ஒகேனக்கல், தமிழ்நாட்டிற்கு கர்நாடகம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களுக்கான 44 டி.எம்.சி. தண்ணீரை திறக்கவில்லை.

Mettur dam water level:Monsoon rains intensify in Karnataka KRS dam overflowing Cauvery water release

இதையடுத்து தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்கும்படி கர்நாடகத்திற்கு உத்தரவிடுமாறு தமிழகம் கோரியுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் அந்த மாநில அரசு அறிவித்தது. இதையடுத்து கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 20000 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் நேற்று மதியம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. மதியம் 2 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது.

இதற்கிடையே நேற்று இரவு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது பிலிகுண்டுவிற்கு 12,500 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இதனால் நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேட்டூர் அணை கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணையை இன்று வந்தடைய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 53.38 அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையில் இருந்து பாசனத்திற்கு விநாடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தால் மட்டுமே நீர் மட்டம் உயரத்தொடங்கும். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியிருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டு 50 அடியாக தண்ணீர் குறைந்துள்ளது. தற்போது மழை அதிகரித்து தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+