நாளையே முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறப்பு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மேட்டூர் அணை நீர்மட்டம் 116.53 அடியாக உயர்வு!

    சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு 18,000 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக உயர்ந்ததால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் கர்நாடகா மற்றும் கேரளாவில்(வயநாடு) காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது.

    mettur dam water level tuch full capacity on tomorrow

    தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட கிருஷ்ணராஜசாகர், கபிணி உள்ளிட்ட அணைகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. இதனால் அந்த அணைகளின் நீர்மட்டம் சில நாட்களிலேயே முழு கொள்ளளவை எட்டும் நிலையை எட்டியது.

    இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீரை அப்படியே காவிரி ஆற்றில் கர்நாடகா திறந்துவிட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணை நீர் மட்டம் விறுவிறுவென அதிகரித்தது. குட்டை போல் இருந்த மேட்டூர்அணை ஒரே வாரத்தில் அணை கடல் போல் மாறியது. மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டிய பின்னர் காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு படிப்படியாக அதிகரித்து அணையின் நீர் மட்டம் 115 அடிக்கு மேல் கடந்த மாதம் உயர்ந்தது. அதன்பின்னர் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மீண்டும் கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 42 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து 65,000லிருந்து 72,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

    தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65,000 கனஅடியாக உயர்ந்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.59 அடியை எட்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு என்பது 89.67 டிஎம்சி ஆக இருக்கிறது. அணை எந்த நேரமும் நிரம்பும் என்பதால் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு 18,000 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகரிக்கப்படலாம் என்பதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளையும் இதே அளவு நீர் வரத்து இருந்தால் நாளையே மேட்டூர் அணை நிரம்பும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+