தமிழகத்தின் தாகத்தை தீர்க்க மேட்டூர் அணைக்கு ஓடோடி வந்தாள் காவிரி.. அணையின் நீர்மட்டம் 75 அடி உயர்வு
சேலம்: காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 75 அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை காரணமாக, தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடுமையான மழை பெய்து வருகிறது. அதேபோல் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் காவிரியில் நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

கர்நாடகத்தில் சிவமோகா, பெலகாவி, மடிகேரி, மைசூர், மங்களூர், குடகு உள்ளிட்ட பகுதிகளில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கர்வாரில் நிலச்சரிவு ஏற்பட்டு கொங்கன் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பு 3 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கபிணி மற்றும் அதன் தடுப்பு அணைகளிலிருந்து வினாடிக்கு 1.25 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 1.75 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.15 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை முதல் 71 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்போது 75 அடியாக உயர்ந்துள்ளது.
அதாவது கடந்த 24 மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 15 அடியை தாண்டியது. நாளையும் கர்நாடகத்துக்கு மழை பெய்யும் என்பதால் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications