பின்னாடி உட்கார்ந்தால் மேடை தெரியுதா? ஆன் தி ஸ்பாட்டில் அன்பில் மகேஷ்! திமுக இளைஞரணி மாநாடு ருசிகரம்
சேலம்: திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் பின்வரிசைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கும் மேடை சரியாக தெரிகிறதா என்பதை ஆன் தி ஸ்பாட்டில் ஆய்வு செய்து தேவையான யோசனைகளை தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நாளை நடைபெறுவதால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் திடல் உருவாக்கப்பட்டுள்ளது.

மாநாடுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என்பதால் பந்தல், மேடை, நுழைவு வாயில்கள், கேட்டரிங் நடைபெறும் இடம், அமருமிடம், ஓய்விடம், கழிப்பறை, என ஒவ்வொரு இடத்தையும் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் பார்வையிட்டதோடு தேவையான இடங்களில் சில ஆல்டிரேஷன்களையும் கூறினார்.
குறிப்பாக மாநாட்டின் பந்தல் பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் மேடை தெளிவாக உள்ளதா என்பதையும், ஒலி, ஒளி அமைப்பு எப்படி செய்யப்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே கேட்டறிந்துக் கொண்டார். மாநாடு ஏற்பாடுகளை பந்தல் சிவா மேற்கொண்டிருந்ததால் பெரிதாக எந்த குறையும் இல்லை. இருப்பினும் ஓரு சில இடங்களில் மட்டும் சில மாற்றங்களை செய்யுமாறு அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
அதே போல் பந்தல் குழு, பொது இருக்கை கண்காணிப்பு குழு, வாகன கட்டுப்பாட்டுக் குழு, நிதிக்குழு, பேச்சாளர் ஒருங்கிணைப்பு குழு, மேடை நிர்வாக குழு, உணவுக்கூடம் மற்றும் கடைகள் கண்காணிப்பு குழு, தீர்மானக் குழு, கழக முன்னணியினர் இருக்கை வசதி குழு, இந்தியா கூட்டணி தொடர்பு குழு, பொது பாதுகாப்புக் குழு, விளம்பரக் குழு, பத்திரிகை ஊடக ஒருங்கிணைப்பு குழு, மருத்துவக் குழு என திமுக இளைஞரணி மாநாடுக்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து குழுக்களின் பொறுப்பாளர்களை அழைத்து சில முக்கிய இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்களை கொடுத்தார்.
அதேபோல் சேலம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ், காலையிலிருந்து தாம் ஆய்வு செய்த விவரங்களை காரில் பயணித்த போது எடுத்துக் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications