ஏற்காடு டூ சேலம்.. அதிகாலை 4 மணிக்கே என்ன ஒரு ஓட்டம்.. அசரடித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்
சேலம்: சேலம் ஏற்காட்டிற்கு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நேற்று அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு ஏற்காட்டில் இருந்து சேலத்துக்கு நடந்தே வந்தார். ஏற்காடு அசம்பூரில் இருந்து சேலம் அடிவாரம் சோதனை சாவடி வரை உள்ள 30 கிலோ மீட்டர் தூரத்தை ஓட்டமும் நடையுமாக 3 மணி நேரத்தில் வந்தடைந்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் இப்படி அடிக்கடி நடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 2006-2011 காலகட்டத்தில் சென்னையின் மாநகர மேயராக இருந்தவர் ஆவார். 2011 இல் சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்ட மா சுப்பிரமணியன், அதிமுகவின் சைதை சா. துரைசாமியிடம் தோல்வியடைந்தார். 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானார்.2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் சைதாப்பேட்டை தொகுதியில் வென்று எம்எல்ஏ ஆனார். 2021ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், சுப்பிரமணியனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

அமைச்சர் மா சுப்பிரமணியன் உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மாரத்தான் வீரரான இவர்,தனது முதல் மாரத்தானை 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி ஆரோவிலில் நடந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட சுப்பிரமணியன், இதுவரை 100 மாரத்தான் போட்டிகளைக் கடந்திருக்கிறார். அமைச்சர் மா சுப்பிரமணியன் எந்த ஊருக்கு சென்றாலும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தியது இல்லை.. அதிகாலையிலேயே எழுந்து ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுவார்.
அந்த வகையில் தான், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்காட்டில் உடற்பயிற்சி மேற்கொண்டார். 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 13-ந் தேதி மா.சுப்பிரமணியன் சேலம் வந்தார். பின்னர் அவர் ஓமலூர், ஏற்காடு அரசு மருத்துவமனைகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து அன்று இரவு அமைச்சர் ஏற்காட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று அதிகாலை நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். அதன்படி அதிகாலை 4.45 மணிக்கு ஏற்காடு அசம்பூரில் இருந்து சேலத்துக்கு நடந்தே வந்தார். அப்போது அவருடன் 10-க்கும் மேற்பட்டவர்கள் நடந்து வந்தார்கள். அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொண்டை ஊசி வளைவுகளில் ஓட்டமும், நடையாகவும் வந்தார். அதிகாலை 4.45 மணிக்கு ஏற்காடு அசம்பூரில் இருந்து புறப்பட்ட அவர், காலை 7.50 மணிக்கு ஏற்காடு அடிவாரம் சோதனை சாவடிக்கு வந்தடைந்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்காடு அசம்பூரில் இருந்து சேலம் அடிவாரம் சோதனை சாவடி வரை உள்ள 30 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் நடந்தே வந்தடைந்தார். அதன்பிறகு அவர் காரில் ஏறி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு சென்றார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications