திமுக இளைஞரணி மாநாடு! பக்கா ஸ்கெட்ச் ரெடி! பார்த்து பார்த்து யோசனை சொல்லி வரும் உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டை ஒட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகளில் முழு வீச்சாக இறங்கிவிட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் தான் மாநாடு நடைபெறுகிறது என்பதால், அங்கு 100 ஏக்கர் பரப்பளவிலான திடல் ரெடியாகி வருகிறது. பந்தல், மேடை, நுழைவு வாயில்கள், கேட்டரிங் இடம், அமருமிடம், ஓய்விடம், கழிப்பறை, என ஒவ்வொன்றையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

Minister Udhayanidhi Stalin full swing for DMK Youthwing Conference work

இந்த மாநாட்டை இந்திய ஒன்றியத்திற்கே திருப்புமுனை தரும் வகையில் நடத்திக் காட்டுவோம் எனக் கூறிவரும் உதயநிதி ஸ்டாலின், அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவுக்கு மாநாட்டு மன்னன் என்ற புதிய அடைமொழியை சூட்டி அவரை வைத்து தான் களப்பணிகளை கவனித்து வருகிறார்.

மதுரை அதிமுக மாநாட்டில் தொண்டர்களுக்கு புளிசாதம் கொடுக்கப்பட்டது போல் இல்லாமல் அறுசுவை விருந்து கொடுக்கும் திட்டத்தில் உள்ள உதயநிதி ஸ்டாலின், அதற்கான மெனுகார்டையும் பார்த்து பார்த்து ரெடி செய்து வருகிறார். மாநாடுக்கு இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள போதும் இப்போதே பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பணிகளை தொடங்கி வைத்துவிட்டார்.

தாம் பொறுப்பேற்ற பிறகு, தனது தலைமையில் நடைபெறும் முதல் மாநாடு என்பதால் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டை வரலாறு பேசும் அளவுக்கு மிகப் பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் நடத்திக் காட்டும் திட்டத்தில் இருக்கிறார். அமைச்சர் நேரு தனக்கே உரிய பாணியில் மாநாட்டு பணிகளை கவனித்து வருகிறார்.

இதனிடையே சேலம் திமுக இளைஞரணி மாநாட்டுக்காக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நிதியை வாரி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+