நாமக்கல், கரூர் மாவட்ட கைதிகளை அடைக்கும் வகையில் நாமக்கல்லில் மிகப்பெரிய புதிய சிறை கட்ட முடிவு
சேலம் : நாமக்கல், கரூர் மாவட்ட கைதிகளை அடைக்கும் வகையில் நாமக்கல்லில் புதிதாக மாவட்ட சிறை கட்டவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் இதுதவிர தர்மபுரி மாவட்ட சிறையை விரிவாக்கம் செய்து கூடுதல் கைதிகளை அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது அதிகாரிகள் கூறினார்கள். தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் நேற்று சேலம் மத்திய சிறையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்த நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோவை,மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை (பாளையங்கோட்டை), கடலூர் ஆகிய இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன.இதுதவிர ஒவ்வொரு மாவட்டங்களிலும் கிளை சிறைகள் உள்ளன.இங்குதான் தண்டை குற்றவாளிகள்,விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். தமிழகத்தில் சில சிறைகளில் சிறை கைதிகளின் எண்ணிக்கை, அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட மிகவும் அதிகமாக உள்ளது. அதனை குறைக்கும்வகையில் அவ்வப்போது புதிய சிறைச்சாலைகள் கட்டப்பட்டு திறக்கப்படுகின்றன.

தற்போது லம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1,100-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சிறைச்சாலைக்கு தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் நேற்று முன்தினம் வந்தார். அவரை சேலம் மத்திய சிறை எஸ் பி வினோத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து சிறையில் கைதிகளை வக்கீல்கள் பார்வையிடும் முன்பதிவு அறை உள்ளிட்ட பல்வேறு இடங்களை டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் சிறை வார்டர்களிடம் குறைகள் கேட்டறிந்தார். பின்னர் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதையடுத்து டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் கலெக்டர் பிருந்தாதேவியை சந்தித்து பேசினார்.
இதையடுத்து அவர் தர்மபுரி சென்று மாவட்ட சிறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அந்த மாவட்ட கலெக்டரையும் சந்தித்து பேசினார். இந்த ஆய்வு குறித்து சிறை அதிகாரிகள் கூறும் போது, சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள சிறையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு வெளிநாட்டு கைதிகள் அல்லது இலங்கை அகதிகள் கைதிகளை அடைக்க அரசு திட்டமிட்டு வருகிறது. மேலும் அங்கு பெண்கள் சிறை அமைக்கவும், திறந்தவெளி சிறை வளாகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதேபோல் நாமக்கல், கரூர் மாவட்ட கைதிகளை அடைக்கும் வகையில் நாமக்கல்லில் புதிதாக மாவட்ட சிறை கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தர்மபுரி மாவட்ட சிறையை விரிவாக்கம் செய்து கூடுதல் கைதிகளை அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் சேலம் மற்றும் தர்மபுரியில் ஆய்வு மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications