சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எடப்பாடியின் நிகழ்ச்சியை புறக்கணித்த புதிய மா.செ. இளங்கோவன்.. பரபரக்கும் சேலம்! நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சேலம்: பதவியை விட்டுக் கொடுத்தவரின் விழாவையே புதிய மாவட்டச் செயலாளர் இளங்கோவன் புறக்கணித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக கடந்த 11 ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். அப்போது 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சராகவும் இருந்தார்.

வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு வெயில் சுட்டெரித்தாலும் 5 நாட்களுக்கு ஜில் மழை இருக்காம் - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு

இதையடுத்து 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பிடித்தது. அப்போதும் அதே இலாகாவில் எடப்பாடி பழனிச்சாமி நீடித்தார். ஜெயலலிதா மறைந்த பிறகு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்வராக பொறுப்பேற்றார்.

மாவட்டச் செயலாளர்

மாவட்டச் செயலாளர்


அப்போது சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த அவர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். அப்போது அவர் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவியில் நீடித்தார். இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி அமைப்பு தேர்தல் நடைபெற்றது.

 இணை ஒருங்கிணைப்பாளர்

இணை ஒருங்கிணைப்பாளர்

இதற்காக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மாவட்ட செயலாளர் பதவிக்கு மனு கொடுத்தார். அப்போது மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவனும் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மனு அளித்தார். இந்த நிலையில் மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது நண்பரான இளங்கோவன் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

11 ஆண்டுகளுக்கு பிறகு

11 ஆண்டுகளுக்கு பிறகு

11 ஆண்டுகளுக்கு பிறகு தனது பதவியை இளங்கோவனுக்கு எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுத்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. மேலும் எடப்பாடி ஆதரவாளர்கள் இளங்கோவனுக்கு மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுத்ததால் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 நிகழ்ச்சியில் ஈபிஎஸ்

நிகழ்ச்சியில் ஈபிஎஸ்

இந்த நிலையில் கொங்கணாபுரத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் அதிமுகவின் இணை ஒருங்கிணைுப்பாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் மின்வெட்டு பிரச்சினையால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 நிலக்கரி கொள்முதல்

நிலக்கரி கொள்முதல்

நிலக்கரியை கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை அரசு வழங்க வேண்டும்ய எனது வீட்டில் இன்று காலை 6 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. 8 மணிக்குத்தான் மின்சாரம் வந்தது. அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் மின் தடை ஏற்படுகிறது என்றார்.

 புறக்கணித்த இளங்கோவன்

புறக்கணித்த இளங்கோவன்

இந்த விழாவில் அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றிருந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரும் கட்சியின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளருமான இளங்கோவன் விழாவைப் புறக்கணித்தது. அந்க கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். மேலும் எதற்காக இளங்கோவன் இப்படி செய்தார் என்பது குறித்தும் அவர்களுக்குள்ளாகவே விவாதித்து வருகிறார்கள்.

 கொடநாடு விசாரணை

கொடநாடு விசாரணை

கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்திய போது கொடநாட்டில் என்னென்ன இருந்தன என்பது குறித்தெல்லாம் அவர் தகவல்களை அளித்ததாக தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகரமான இளங்கோவனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தாரா இளங்கோவன் என்ற கேள்வி எழுகிறது.

English summary
Salem rural District secretary Ilangovan boycotts Ex CM Edappadi Palanisamy's event in Salem.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X