Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛ஓபிஎஸ் + சசிகலா + டிடிவி’.. மீண்டும் ஒன்றாகிறதா அதிமுக? மூத்த தலைவர்களுக்கு எடப்பாடி கொடுத்த உறுதி

Subscribe to Oneindia Tamil

சேலம்: அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் 3 பேரையும் ஒருங்கிணைக்க அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் முனைப்பு காட்டி வருவதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அந்த கட்சியில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறிவிட்டன. டிடிவி தினகரன் கட்சியில் சேர்க்கப்பட்டு நீக்கப்பட்டார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு சசிகலாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

Edappadi Palaniswamy ADMK

இதையடுத்து ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன்மூலம் தற்போது அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது அதிமுக பல்வேறு தேர்தல்களில் தோல்வியடைந்து வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல், ஈரோடு கிழக்கு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தல்கள் உள்ளிட்ட பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது. நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியில் இருந்து அதிமுக விலகி உள்ளது.

இத்தகைய சூழலில் தான் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் மூத்த தலைவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுகவின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான செங்கோட்டையன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, நந்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேற்று தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை என்பது சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நடந்துள்ளது.

இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தொடர் தோல்வி, தோல்வியில் இருந்து மீண்டு வருவது, 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாராவது, 2026 சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் பாஜகவை எப்படி எதிர்கொள்வது? உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேளையில் அதிமுக தலைவர்கள் தென்மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்துவது அவசியம் என்று எடுத்துரைத்துள்ளனர். இந்த வேளையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களை ஒருங்கிணைப்பது பற்றிய விவாதம் எழுந்துள்ளது.

அதாவது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை அதிமுகவில் சேர்த்தால் தென்மாவட்டங்களில் கட்சிக்கு பலம் அதிகரிக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை கேட்ட எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு பிடி கொடுக்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க அவர் இசைவு தெரிவிக்கவில்லை. மாறாக

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைப்பதை விட தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைக்க மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்ட நிலையில் அது பயனளிக்கவில்லை என கூறப்படுகிறது. அதிமுகவில் மீண்டும் ஓ பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவது இது முதல் முறையல்ல. அவர் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை வெளிப்படுத்தி வருகிறார். அதேபோல் தான் நேற்றைய கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+