பேசிக்கொண்டு இருக்கும் போதே.. பாதியில் நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி.. சட்டென ஓபிஎஸ் தந்த ரியாக்சன்
சேலம்: சேலம் பாஜக பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேச்சை பாஜக நிர்வாகி ஒருவர் பாதியிலேயே நிறுத்தச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓ பன்னீர்செல்வம் செய்த செயல் மேடையில் திடீர் பரபரப்பை உண்டாக்கியது.
பிரதமர் மோடி இன்று சேலத்தில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்கிறார். மதியம் 12.50 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி வரும் இந்த நிகழ்வில் கூட்டணி தலைவர்கள் மேடையேற்றப்பட்டனர். ஓ பன்னீர்செல்வம், பாமகவின் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பங்கேற்று உள்ளனர் . அதேபோல் டிடிவி தினகரனும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இதன் மூலம் மேடையில் பிரம்மாண்ட கூட்டணியை ஏற்றி பாஜக சாதித்து உள்ளது.
சேலத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். சேலம் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசி முடித்த பின்னர் ஓபிஎஸ் பேசினார். அப்போது 10 ஆண்டு காலமாக சிறப்பான ஆட்சியை நடத்துகிறார் பிரதமர். ஒரே அரசாணையில் 11 மருத்துவ கல்லூரிகள் தொடங்க உத்தரவிட்டவர் பிரதமர் மோடி.
இன்று உலக நாடுகள் எல்லாம் நம்மை பார்த்து வியக்கிறேன், என்று ஓ பன்னீர்செல்வம் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் ஓ பன்னீர்செல்வம் பேசும் போதே அதை பாஜக நிர்வாகி ஒருவர் நிறுத்த சொன்னார். மோடி வந்துவிட்டார் என்பது போல கையை காட்டி நிறுத்த சொன்னார்.
இதை கேட்டதும் சட்டென்று சுதாரித்த ஓ பன்னீர்செல்வம் பேச்சை நிறுத்தினார். நன்றி வணக்கம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து இருக்கைக்கு சென்று ஓ பன்னீர்செல்வம் நின்றார்.
மோடி பேச்சு; இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி இந்து மதத்தை திட்டமிட்டு தாக்குகிறது. நேரம் கிடைக்கும்போது எல்லாம் இந்து மதத்தை தாக்கி வருகின்றனர். காமராஜர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். 5வது தலைமுறையும் ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக நினைக்கிறது. காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத்திட்டம் எனக்கு உத்வேகம் அளித்தது. மூப்பனாருக்கு எதிராக அரசியல் செய்தது திமுக.
இந்தியா கூட்டணி பெண்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்துகிறார்கள் என்பதற்கு தமிழ்நாடு சாட்சி. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது திமுகவினர் எப்படியெல்லாம் இழிவு செய்தார்கள்.
நாங்கள் பெண்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தபோது எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்துவிட்டன. தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் எனக்கும் கிடைத்து வரும் மக்கள் ஆதரவை நாடே பார்க்கிறது. கோவையில் நேற்று மக்கள் கடலில் நீந்திக்கொண்டே பயணம் செய்தேன். பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கமே தொலைந்துபோய்விட்டது.
தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள். ஏப்ரல் 19ஆம் தேதி விழும் ஒவ்வொரு ஓட்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மீண்டும் வேண்டும் மோடி என மக்கள் முடிவெடுத்துள்ளதால் வெற்றி எண்ணிக்கை நானூறை தாண்டும்.
நவீன உள் கட்டமைப்பிற்கு நானூறை தாண்ட வேண்டும். பாரதம் தன்னிறைவு பெற நானூறுக்கும் மேல் பெற வேண்டும். விவசாயிகள் பயனடைய நானூறுக்கும் மேல் பெற வேண்டும், என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications