“நானூறுக்கும் மேல..” தமிழில் முழக்கமிட்ட பிரதமர் மோடி! சேலம் அதிர எழுந்த பாஜகவினரின் சத்தம்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசும்போது "நானூறுக்கும் மேல" என தமிழில் முழக்கமிட்டுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று கோவையில் பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று சேலத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி திறந்தவெளி வாகனத்தில் வந்து இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

PM Narendra Modi speaks in Tamil at salem

இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமாக தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேக தலைவர் பாரிவேந்தர், தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏசி சண்முகம், பாஜக பிரமுகர் சரத்குமார், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பாரத அன்னை வாழ்க" என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார். கோட்டை மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். தமிழ்நாட்டில் எனக்கும், பாஜகவுக்கும் கிடைத்த ஆதரவை பார்த்து நாடே வியந்து வருகிறது. நேற்று கோவையில் நடந்த வாகன பேரணியில் மக்கள் கடலில் நீந்தியபடி பயணம் செய்தேன். தமிழ்நாட்டில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் கலைந்துவிட்டது.

இந்த முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். நேற்று பாமக தலைவர்கள் நமது கூட்டணியில் இணைய சம்மதித்துள்ளனர். ஐயா மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் திறமைகளை கொண்டு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல புதிய உத்வேகம் கிடைத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணிக்கு வருக வருக என வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டு மக்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள். ஏப்ரல் 19ஆம் தேதி விழும் ஒவ்வொரு ஓட்டும் என்.டி.ஏ கூட்டணிக்கு என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மீண்டும் வேண்டும் மோடி என மக்கள் முவெடுத்துள்ளதால் வெற்றி எண்ணிக்கை நானூறை தாண்டும். நவீன உள் கட்டமைப்பிற்கு நானூறை தாண்டை வேண்டும். பாரதம் தன்னிறைவு பெற நானூறுக்கும் மேல் பெற வேண்டும். விவசாயிகள் பயனடைய நானூறுக்கும் மேல் பெற வேண்டும்." எனப் பேசினார்.

நான் பலமுறை சேலம் வந்துள்ளேன். இந்த முறை பழைய ஞாபகம் வருகிறது. 50 வருடங்களுக்கு முன் நான் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்லும் போது சேலத்தில் ரத்னவேல் என்பவர் இந்த ஊரின் பெருமைகள் குறித்து என்னிடம் சொல்லிக் கொண்டே வந்தார். அவர் பேச்சை கேட்டு என்னிடம் ஒரு ஈர்ப்பே வந்துவிட்டது. அவர் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். அவர் ஒரு விபத்தில் உயிர் இழந்துவிட்டார். எனக்கு இப்போது அவர் நினைவு வந்தது" எனப் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

தனது பேச்சின்போது, பல முறை தமிழில் பேசினார் பிரதமர் மோடி. பாரத அன்னை வாழ்க என தமிழில் பேசி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, என் அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே.. எனப் பேசினார் பிரதமர் மோடி. மேலும், "400 சீட்டுக்கு மேல் பாஜக வெல்லும்" என்ற முழக்கத்தை முன்வைத்து "நானூறுக்கும் மேல" என தமிழில் பேசினார் மோடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+