சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா! பாமக எம்.எல்.ஏ.க்கள் பாதியில் வெளியேற இது தான் காரணம்!
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் பாதியில் வெளியேறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எங்கும் சர்ச்சை எதிலும் சர்ச்சை என்பதை போல் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது கவனிக்கத்தக்கது. இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது என்பது பற்றி அதில் கலந்துகொண்டு வெளியேறிய சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ. அருளிடம் பேசினோம்.

அவர் நம்மிடம் கூறியதாவது, ''பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கான அழைப்பு நேற்றிரவு வரை எனக்கு வரவில்லை. இத்தனைக்கும் எனது மேற்கு தொகுதிக்குள் தான் பல்கலைக்கழகம் இருக்கின்றது. இன்று என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, திடீரென பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பட்டமளிப்பு விழாவுக்கு அவசியம் வரவேண்டும் என வற்புறுத்தி அழைத்தார்.''
''எனது தொகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பட்டம் பெறுவதால் சரி கலந்துகொள்ளலாம் என முடிவெடுத்து ஈகோ பார்க்காமல் பட்டமளிப்பு விழாவுக்கு சென்றேன். அதேபோல் மேட்டூர் தொகுதி பாமக எம்.எல்.ஏ. சதாசிவமும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். நாங்கள் இருவரும் சென்ற போது, துணைவேந்தர் சரியாக முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. வேண்டாத விருந்தாளியாக பார்த்தார்.''
''இதனிடையே சேலம் மாவட்டத்துக்கு வருகை புரிந்துள்ளதால் ஆளுநர் ரவிக்கு சால்வை அணிவிக்க விரும்பிய மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் அது குறித்து கேட்டிருக்கிறார். அதற்கும் பட்டமளிப்பு விழா ஏற்பாட்டாளர்களிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இதனால் இனியும் இங்கே இருப்பது மரியாதையற்றது என நினைத்த நான் அங்கிருந்து புறப்பட்டு வந்துவிட்டேன். மேட்டூர் தொகுதி பாமக எல்.எல்.ஏ. சதாசிவம் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் நேரடியாகவே தனது வருத்தத்தை தெரிவித்துவிட்டு புறப்பட்டுவிட்டார்.'' இவ்வாறு பாமக எம்.எல்.ஏ. அருள் கூறினார்.
இதனிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஏராளமான சர்ச்சைகளும் புகார்களும் இதுவரை வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications