“ஆர்எஸ்எஸ் அடிமைகள் அவர்கள்..” அன்புமணி தரப்பை சாடிய பாமக செயல் தலைவர் ஸ்ரீகாந்தி!
சேலம்: பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, தங்களை எதிர்த்து செயல்படுவது ஆர்எஸ்எஸ் அடிமைகள் என அன்புமணி தரப்பை கடுமையாக சாடியிருக்கிறார்.
பாமகவின் தலைவர் யார் என்பதில் பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும், அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸும் மாறி மாறி நீக்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இந்த பொதுக்குழு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இப்படி இருக்கையில், பொதுக்குழுவில் பேசிய ஸ்ரீகாந்தி, அன்புமணி தரப்பை ஆர்எஸ்எஸ் கைக்கூலி என விமர்சித்திருப்பது விவாதங்களை தூண்டியிருக்கிறது.
ஸ்ரீகாந்தி மேலும் பேசியதாவது, "ஐயாவுக்கு பைத்தியம் பிடித்து இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். மக்கள் மீது அவருக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. ஐயா இல்லாத இந்த பாமக, பிணத்துக்கு சமம். அந்த பிணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என அன்புமணி டீம் நினைக்கிறது. ஆனால், இந்த ஸ்ரீகாந்தி உயிரோடு இருக்கும் வரைக்கும், லட்சக்கணக்கான தொண்டர்கள் உயிரோடு இருக்கும் வரைக்கும் அது நடக்கவே நடக்காது.
இப்போது நடக்கும் பிரச்சனையைப் பற்றி கவலைப்படாதீர்கள். இது ஒரு நல்ல சகுனம். கட்சியை இத்தனை நாட்களாக பிடித்திருந்த ஏழரை தொலைந்து போய் உள்ளது. துரோகிகள், சுயநலவாதிகள் எல்லோரும் போய்விட்டார்கள். விரைவில் தேர்தல் வரப்போகிறது, இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சாதாரண கட்சியாக இருக்க கூடாது.
அரும்பாடு பட்டு கட்சியை வளர்த்த ஐயாவை, நீதிமன்றம் ஏறி கட்சி மீட்கிற நிலைக்கு கொண்டு வந்த நீங்க.. மக்களோட உரிமையை மீட்கப்போறேன் என்று சொல்வது நல்ல கேலிக்கூத்து. எதற்கெடுத்தாலும் எங்கள் நிர்வாகிகளை திமுக கைக்கூலி என்று மேடைக்கு மேடை முழங்குகிறார்கள். இதை சொல்கிறவர்கள் யார் என்று பார்த்தால், ஆர்எஸ்எஸ் அடிமைகளாக இருக்கிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications