கள்ளக்காதலனுடன் கள்ளத்தனமாக செல்போனில் பேசிய ஷாலினி.. கண்டித்த பிரபு.. சேலத்தில் நடந்த ஷாக் சம்பவம்!
சேலம்: சேலத்தில் மர்மமான முறையில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரை கைது செய்தனர்.
Recommended Video
சேலம் அம்மாபேட்டை மார்க்கெட் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு (39) வாழையிலை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஷாலினி (22). இருவருக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது.
இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆண் நண்பருடன் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

செல்போன்
இதை கணவர் பலமுறை கண்டித்தும் கேட்காததால் மனைவிடம் இருந்த செல்போனை கணவர் பறித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் கணவருக்கு தெரியாமல் அடிக்கடி செல்போனை தெரியாமல் எடுத்து பேசி வந்ததாக கூறப்படுகிறது.

கொள்ளையர்கள் நகை பறிப்பு
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து தன்னிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டு கணவரை கொலை செய்துவிட்டு சென்று விட்டதாக கூறி மனைவி ஷாலினி கூச்சல் எழுப்பியுள்ளார்.

காவல் நிலையம்
உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது பிரபு இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் உறவினர்கள் நேரில் பார்த்தபோது, பிரபு மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், மனைவி ஷாலினி கொலை செய்து இருக்கலாம் எனவும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

காவல் துறை
பின்னர் விரைந்து வந்த அம்மாபேட்டை காவல் துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஷாலினியை காவல் நிலையம் அழைத்துச் சென்று இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து ஷாலினிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பிருப்பதை அடுத்து ஷாலின் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மற்றொரு நபரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இச் சம்பவம் காவல் நிலையத்திற்கு பின்புறமே நடைபெற்றுள்ளதால் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல்












Click it and Unblock the Notifications