பிரபல ரவுடி சிடி மணியை “கன் பாயிண்ட்டில்” சுற்றி வளைத்த போலீஸ்! சேலத்தில் பதுங்கி இருந்தவர் கைது!
சேலம்: சென்னையில் சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரௌடி காக்காதோப்பு பாலாஜியின் கூட்டாளியான ரவுடி சிடி மணியை சென்னை போலீசார் சேலத்தில் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடியான சிடி மணி மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னையின் பிரபல ரவுடி சிடி மணி என்கிற மணிகண்டன். தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த இவர் மீது ஆயுதங்கள் பதுக்கல், தொழில் அதிபர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், போலீசாரை துப்பாக்கியால் சுட்டது என பல வழக்குகள் உள்ளன. தமிழ்நாடு அளவில் பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த திண்டுக்கல் பாண்டியின் சிஷ்யனாக இருந்த சிடி மணி, அவரது மரணத்துக்கு பிறகு மிகப்பெரிய ரவுடியாக உருவெடுத்தார்.

சிடி மணி மீது அடையாறு, சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரௌடி சிடி மணி கடந்த 2007, 2009, 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த சிடி மணி தலைமறைவானார். அதன்பிறகு 2021ல் மீண்டும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்ட அவர் அதன் பிறகு ஜாமீனில் வந்து தலைமறைவானார்.
ஏ பிளஸ் ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்குகள் உட்பட 33 குற்ற வழக்குகள் உள்ளன. சென்னை தி.நகர் பஜாரில் சிடி கடை வைத்திருந்ததால் இவருக்கு சிடி மணி என்ற அடைமொழி வந்தது. தொழில் போட்டியில் ஒருவரை கொலை செய்த சிடி மணி பின்னர் பெரிய ரவுடியாக உருவெடுத்தார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.
காக்கா தோப்பு பாலாஜியும், சிடி மணியும் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் காரில் சென்றபோது, பிரபல ரவுடி சம்பவம் செந்தில் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றது. இதில் சிடி மணியும் காக்கா தோப்பு பாலாஜியும் குண்டு துளைக்காத காரில் சென்றதால் உயிர் தப்பி இருந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து, சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.
குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த 18 ஆம் தேதி, வட சென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜியும் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார். இந்த 2 ரவுடிகளும் பிடிக்கச் சென்ற போலீஸார் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இவர்களை தவிர கடந்த இரண்டரை மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை சென்னையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், போலீசாரால் அண்மையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியான ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி சி.டி. மணி (42) சென்னை போலீசாரால் சேலத்தில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னையை விட்டு தப்பி சி.டி மணி சேலத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் சென்னை போலீசார் சேலம் சென்று சி.டி மணியை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சேலத்தில் கைது செய்யப்பட்ட சிடி மணியை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications