ஆன்மீகத்திற்கு எதிரானவரா கருணாநிதி? பாஜக ஏமாற்றப் பார்க்கிறது.. சொல்கிறார் அமைச்சர் எவ வேலு!

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஆன்மீகத்திற்கு எதிரானவர் கருணாநிதி என்று சொல்லி சில அரசியல் கட்சிகள் சிண்டுமுடிய பார்க்கின்றனர் என்று அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை சட்டசபையில் தமிழக அரசு நிறைவேற்றியது. அந்த தீர்மானம் குறித்து மக்களுக்கு விளக்கி கூறும் வகையில் திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுகூட்டம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கழக உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினரும், பொது பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு கலந்து கொண்டார்.

ஆன்மீகத்திற்கு எதிரானவரா?

ஆன்மீகத்திற்கு எதிரானவரா?

இந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், மத்திய அரசு ஹிந்தியை திணிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிற்று மொழியாக இந்தியை கொண்டு வருவது. அதேபோல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆன்மீகத்துக்கு எதிரானவர் அல்ல. ஆன்மீகத்துக்கு எதிரானவர் என்றால் அத்தனை கோயில்களும் குடமுழுக்கு கண்டிருக்குமா? திருவாரூர் தேர் ஓடியிருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

திமுக பாதுகாக்கும்

திமுக பாதுகாக்கும்

தொடர்ந்து பேசிய அவர், பிற்காலத்தில் தமிழை வளர்த்தது திராவிடம் என்றால் முற்காலத்தில் தமிழை வளர்த்தது பக்தி இலக்கியம். ஆன்மீகத்திற்கு எதிரானவர் கருணாநிதி என்று சொல்லி சில அரசியல் கட்சிகள் சிண்டுமுடிய பார்க்கின்றனர். ஹிந்தி வந்தால் திருவாசகம், தேவாரம் பாட முடியுமா? கோவிந்தா..கோவிந்தா என்று சொல்ல முடியுமா? திராவிடம் என்பது ஆன்மீகத்தையும், தமிழையும் பாதுகாக்க கூடிய இயக்கம்.

ஆங்கிலத்தின் பயன்பாடு

ஆங்கிலத்தின் பயன்பாடு

நான்காயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க மறுப்பது ஏன்? சோலிக்கே பீச்சே என்று சொல்லியிருந்தால் நம் பிள்ளைகள் கை நிறைய சம்பாதிக்க முடியுமா? ஆங்கிலம் பயின்றதால் பல்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் சென்று சம்பாதித்து பணம், பொருள் ஈட்டி வருகின்றனர். கலை உலகத்தையும், திராவிட இயக்கத்தையும் பிரித்து பார்க்க முடியாது.

இந்திக்கு முதலிடம்

இந்திக்கு முதலிடம்

மோடியும், அமித்ஷாவும் குஜராத் மாநிலத்தில், குஜராத்தி மொழியை இரண்டாம் நிலையில் விட்டுவிட்டு இந்தியை முதலிடத்தில் வைத்து ஏமாந்துவிட்டார்கள். நீங்கள் ஏமாந்ததோடு மட்டுமின்றி எங்களையும் ஏமாற்ற பார்க்கிறீர்கள். வடநாட்டில் இந்தி படித்தவர்களுக்கு வேலை இல்லை என்பதால்தான் பிழைப்பு தேடி தமிழகம் வருகின்றனர். 1938 ராஜாஜியை பார்த்தவர்கள் நாங்கள். எட்டு கோடி தமிழர்களின் மொத்த உருவம் நம் முதலமைச்சர் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+