திமுகவில் ’துரந்தர்’ பிரேமலதா? ஒரே பேச்சில் சோலியை முடித்த அண்ணியார்! கடும் அப்செட்டில் அறிவாலயம்!
சேலத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் பிரசாரக் கூட்டத்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரேமலதா விஜயகாந்த் பேசிய கருத்துகள் திமுகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாசாரம்" என ஸ்டாலின் முன்பு பிரேமலதா பேசியதால் அவரும் கடும் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், திமுக குடும்பத்தை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் பிரேமலதாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரேமலதா, முதலில் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு அளிக்கும் மரியாதை மற்றும் பாதுகாப்பு குறித்து பாராட்டுக்களுடன் தனது உரையை தொடங்கினார்.

மேலும், சமீபத்தில் பிரச்சாரத்துக்கு முன்னதாக நடைபயிற்சியில் தானும் முதல்வருடன் இணைந்து நடந்ததாகவும், அப்போது பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து அவர் காட்டும் அக்கறையை நேரில் பார்த்ததாகவும் கூறினார்.
பிரேமலதா விஜயகாந்த்
ஆனால் அதற்குப் பிறகு அவர் கூறிய ஒரு கருத்துதான் மேடையில் இருந்தவர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியது. "தமிழ்நாடு முழுக்க ஒரே குற்றச்சாட்டு தான் அண்ணன் மேல இருக்கு. அதுவும் இந்த பெண்கள் கூட்டத்தில் நான் சொல்கிறேன். எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை; போதை கலாசாரம் இருக்கு. இதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்? இந்த ஆட்சியின் மீது வேறு ஒன்றும் சொல்ல முடியாது. " என்றார். கூட்டணிக் கட்சிகளின் மேடையில், அதுவும் முதல்வர் முன்னிலையிலேயே பிரேமலதா பேசியதால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
பெண்களின் பாதுகாப்பு
அதே நேரத்தில், தனது உரையின் அடுத்த பகுதியில் பிரேமலதா அந்த குற்றச்சாட்டுகளை சரிசெய்யும் திறன் முதல்வருக்கு இருப்பதாகவும், பெண்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தானும் நேரடியாக எடுத்துச் சொல்லத் தயார் என்றும் கூறினார். பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பாஜக - அதிமுக
பிரேமலதாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டு அதுவும் முதலமைச்சரை மேடையில் வைத்து பாஜக - அதிமுகவின் குரலை போல தான் பேசி இருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர் திமுகவினர். கடந்த காலங்களில் திமுகவைமிகக் கடுமையாக விமர்சித்த பிரேமலதா திடீரென திமுக கூட்டணியில் இணைந்தார். அவரது கட்சிக்கு 10 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது.
ஸ்டாலின் அதிருப்தி
ஆனால் வழக்கமாக பாஜக அதிமுக மேடைகளில் பேசுவதைப் போல பிரேமலதா பேசிவிட்ட நிலையில், அதற்கு பிறகு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சில வார்த்தைகள சொல்லி சமாளித்ததாக சொல்கின்றனர் அதிமுகவினர். மேலும் 'துரந்தர்' படத்தில் வருவது போல திமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவின் ஸ்பை தான் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
திமுக அதிர்ச்சி
இந்நிலையில், பிரேமலதாவின் பேச்சு களத்தில் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்திருப்பது கண்டு திமுக தலைமை கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், திமுக தலைமையின் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக திமுக குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் பிரேமலதா விஜயகாந்த்-ஐ சந்திப்பு பேசியதாகவும், தனது பேச்சு தொடர்பாக அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications