Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருமாவுக்கு போன் போட்ட பிரேமலதா.. கடலூர் விவகாரத்தால் கொந்தளித்த விசிகவினர்.. சர்ச்சையின் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சேலம்: கடலூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மேடையில் இருந்தார். திருமாவளவன் மேடையில் அவரது பெயரை கூறி அறிமுகம் செய்தபோது பிரேமலதா விஜயகாந்த் எழுந்து நிற்கவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் அதுபற்றிய கவலையை பிரேமலதா விஜயகாந்த் பகிர்ந்துள்ளார். அதோடு திருமாவளவனிடம் போனில் பேசி உள்ளார்.

திமுக கூட்டணியில் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி உள்ளது. தேமுதிகவிற்கு 10 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு அடுத்ததாக திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை தேமுதிக பெற்றுள்ளது. இதனால் காலம் காலமாக திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, 2 கம்யூனிஸ்ட்கள், மதிமுக கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

premalatha-vijayakanth-refuses-the-recent-controversy-involving-thirumavalavan

இந்நிலையில் தான் சில நாட்களாக இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திருமாவளவன் இடையே மோதல் உள்ளது. பிரேமலதா விஜயகாந்த், திருமாவளவனை அவமதித்து விட்டதாக வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.

திருமாவை அவமதித்த பிரேமலதா?

அதாவது கடலூரில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இதனால் அவரும் பங்கேற்றார். மேடையில் திருமாவளவன் பேசினார். ஒவ்வொரு வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

திருமாவளவன் வேட்பாளர்களின் பெயரை சொல்ல சொல்ல அவர்கள் எழுந்து மக்களிடம் அறிமுகம் செய்து கொண்டனர். பிரேமலதா பெயரை சொன்னபோது அவர் எழுந்து நிற்கவில்லை. அதேவேளையில் லேசாக சிரித்தபடி இருக்கையிலேயே அமர்ந்து இருந்தார்.இதுதொடர்பான வீடியோ தான் இணையதளங்களில் பரப்பப்பட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கொந்தளித்த விசிகவினர்

குறிப்பாக விசிகவினர் கொந்தளித்தனர். சமூக வலைதளங்களில் பிரேமலதாவுக்கு எதிரான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பலரும், தேமுதிக வேட்பாளர்களுக்கு விசிகவினர் ஓட்டளிப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறி வந்தனர். இதனால் இந்த விவகாரம் பேசும் பொருளானது. இந்நிலையில் தான் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

போன் போட்டு பேசிய பிரேமலதா

சேலத்தில் பிரேமலதா பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இந்த விவகாரம் பற்றி பேசினார். இதுதொடர்பாக பிரேமலதா, ''ஒன்றும் இல்லாத விஷயத்தை ஊதி பெரிதாவுக்குவதே மீடியாவும், சமூகவலைதளங்களும் தான்.

அன்றைய தினமே நானும் அண்ணன் திருமாவளவனும் போனில் பேசிக்கொண்டோம். மக்கள் நல கூட்டணியின்போது அவர் எங்களுடன் நெருக்கமான உறவில் இருந்தார். இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்.

வெளிச்சம் டிவியை திறந்து வைத்தவரே கேப்டன் தான். அப்போது கேப்டன் இன்றைக்கு இருக்கும் அவலங்களை நீங்கள் தான் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்று சொன்னார். அந்த அளவுக்கு உங்களுக்குன் ஒரு புரிதல், நட்பு இருக்கிறது.

திருமாவளவனே சொல்லிவிட்டாரே...

அவரே (திருமாவளவன்) நேற்று ஒரு பிரச்சாரத்தில், மேடையில் முதல்வர் தான் வேட்பாளரை அறிமுகம் செய்ய வேண்டும். அதுதான் அரசியல் மாண்பு, நான் எங்கள் வேட்பாளர்கள் பெயரை சொல்லிவிட்டு மற்றவர்கள் பெயரை சொல்லவில்லை என்றால் தப்பாகிவிடும் என்பதால், சொன்னேன் என்று அவரே கூறியுள்ளார். அண்ணியாரை பற்றி எனக்கு தெரியும். அவர்கள் மிகவும் இயல்பாகத்தான் இருந்தார்கள்.

இந்த விஷயத்தை பெரிதுபடுத்துபவர்கள் எதிர்கட்சிகளும் ஊடகங்களும் தான் என்று அண்ணன் திருமாவளவன் நேற்று பிரச்சாரத்தில் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் என்னுடைய தொகுதியான விருத்தாச்சலத்திற்கும் அவர் பிரச்சாரம் செய்ய வருகிறார். மயிலம், எங்கள் கூட்டணி மற்றும் எங்கள் தொகுதிக்கும் அவர் பிரச்சாரத்திற்கு போய்க்கொண்டு தான் இருக்கிறார். எங்கள் கட்சியை பற்றி விமர்சிக்க வேறு எந்த விஷயமும் இல்லை. இதனால் இப்படியான விஷயத்தை வைத்து தாக்கி விமர்சனம் செய்கின்றனர். இது நியாயமற்றது'' என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+