திமுதிமுன்னு.. ஸ்கூலுக்குள் திடீரென நுழைந்த குட்டீஸ்.. மிரண்ட டீச்சர்கள்.. சேலம் அருகே கலகலகலப்பு
சேலத்தில் பள்ளி திறந்துவிட்டதாக நினைத்து கொண்டு குழந்தைகள் உணவுடன் வந்துவிட்டனர்
சேலம்: பள்ளியில் புத்தகமும், யூனிபார்மும் தருவதை பார்த்துவிட்டு, ஸ்கூல்தான் நிஜமாவே திறந்துவிட்டார்கள் என்று நினைத்து கொண்டு, பிள்ளைகள் மதிய உணவுடன் ஸ்கூலுக்குள் நுழைந்ததை பார்த்துவிட்டு டீச்சர்களே ஆச்சரியப்பட்டு போய்விட்டார்களாம்.
Recommended Video
சேலம் மாவட்டத்தில் 1-வது முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கு 2-ம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், யூனிபார்ம்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள காட்டூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும் குழந்தைகளுக்கு புத்தகங்களும், சீருடைகளும் வழங்கபட்டு வருகின்றன.. அந்த ஸ்கூலில் படிக்கும் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் இதை பற்றி தகவல் சொல்லி இருந்தனர்.
இந்நிலையில் ஸ்கூல்தான் திறந்த விட்டதாக நினைத்துக்கொண்டு பிள்ளைகள் வரிசையாக ஸ்கூலுக்குள் நுழைந்துவிட்டனர்.. இவ்வளவு நாள் கழித்து பள்ளி திறந்திருப்பதால், அவர்கள் முகத்தில் சந்தோஷம் தென்பட்டது.. ஸ்கூல் பையை மாட்டிக் கொண்டு, மதிய உணவுடன் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் வந்திருந்தனர்... பிறகு வழக்கம்போல, தங்களது கிளாஸ்ரூம்களில் பையை வைத்து விட்டு, வெளியே நின்று கொண்டிருந்தனர்.
ஸ்கூலுக்குள் பிள்ளைகளை பார்த்ததும் ஆசிரியர்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர்.. இன்னும் ஸ்கூல் திறக்கப்படவில்லை என்றும், கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகூடங்கள் திறப்பதற்கு அரசு அறிவிக்கவில்லை என்றும் சொல்லி விஷயத்தை புரியவைத்தனர். ஸ்கூல் இல்லை என்றவுடன் குழந்தைகளின் முகம் வாடிவிட்டது.. ஆனால், அவர்களின் ஆர்வத்தை கண்டு ஆசிரியர்கள் வியந்துவிட்டனர்.
பிறகு, "அரசு அறிவித்தவுடன் ஸ்கூல் திறப்பாங்க, அப்போ வாங்க" என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.. சில குழந்தைகள் மதியம் சாப்பிடுவதற்காக கொண்டு வந்த சாப்பாட்டை, வழக்கமாக சாப்பிடும் இடத்திலேயே உட்கார்ந்து, ஆற அமர பொறுமையாக சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு கிளம்பி சென்றார்கள்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications