புது ஆதார் கார்டு எடுக்க போனவருக்கு ஷாக்.. பிரிண்டிங் கடைக்காரர் செய்த காரியம்.. ஆடிப்போன சேலம்
சேலம்: சேலத்தில், மனைவிக்கு புது ஆதார் கார்டு எடுக்க வந்த உறவினரின் ஆதார் கார்டை வாங்கி வைத்துக் கொண்டு, திருப்பி கொடுக்காமல், ஆதார் கார்டின் போட்டோவை மாற்றி வீட்டுக்கடன் வாங்க முயன்ற டிஜிட்டல் பிரிண்டிங் கடை ஓனர் உள்பட 3 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
ஆதார் கார்டு தற்போது தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறிவிட்டது. அரசின் எந்த ஒரு நலத்திட்டங்களை பெற வேண்டும் என்றாலும் ஆதார் கார்டுதான் பெரும்பாலும் கேட்கப்படுகிறது. வங்கி கடன் பெறுவது. புதிதாக அரசின் ஒரு சேவையை பெற வேண்டும் என்றாலும் 11 இலக்கங்கள் கொண்ட ஆதார் கார்டே தற்போது அத்தியாவசியமாக உள்ளது.

ஆதார் கார்டில் ஒருவரின் புகைப்படம், முகவரி போன்ற அனைத்து தகவல்களும் இருப்பதால் முக்கியமான அடையாள சான்றாகவும் இந்த அட்டை உள்ளது. எனவே, ஆதார் பற்றிய விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது என்று அரசும் விழிப்புணர்வு செய்து வருகிறது. இதெல்லாம் இருக்கட்டும்.. சேலத்தில் மற்றொருவரின் ஆதார் கார்டை வைத்து, வீட்டுக்கடன் எடுக்க முயன்ற டிஜிட்டல் பிரிண்டிங் கடை உரிமையாளர் சிக்கியிருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் அம்மாபேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவரான செல்வம், அங்குள்ள ஓட்டலில் பணியாற்றி வருகிறார். 58 வயதான செல்வம் தனது மனைவிக்கு புதிதாக ஆதார் கார்டு எடுக்க டிஜிட்டல் பிரிண்டிங் கடை வைத்து இருக்கும் வினோத்குமார் என்பவரை போய் பார்த்து இருக்கிறார். சேலம் சுகவனேசுவரர் கோவில் வணிக வளாகத்தில் டிஜிட்டல் பிரிண்டிங் கடை நடத்தி வரும் வினோத்குமார், செல்வத்தின் உறவினர்தானாம்.
ஆதார் எடுக்க வேண்டும் என்றால் உங்கள் ஆதார் கார்டும் வேண்டும் என்று செல்வத்திடம் கேட்டு வாங்கியிருக்கிறார் வினோத் குமார். உறவினர் என்பதால் எந்த தயக்கமும் இன்றி தனது ஆதார் கார்டை வினோத்குமாரிடம் கொடுத்துவிட்டு சென்றார். ஒருவாரம் கழித்தும் பிரிண்டிங் கடை வினோத்குமாரின் ஆதார் கார்டையும் கொடுக்கவில்லை. புதிய ஆதார் கார்டும் எடுத்துக்கொடுக்கவில்லை.
இதனால் வினோத் குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் எற்பட்டதால், 4 நாட்கள் கழித்து அந்த பிரிண்டிங் கடைக்கு சென்று மனைவியின் புதிய ஆதார் கார்டு ஏன் இன்னும் எடுக்கவில்லை என்று கேட்டு இருக்கிறார். அதற்கு வினோத் குமார் அளித்த பதிலும் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. இதனால், சேலம் டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் செல்வம் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார், வினோத்குமாரின் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். இதில், செல்வத்தின் ஆதார் கார்டு அட்ரசில், செந்தில் என்பவரின் புகைப்படத்தை வைத்து, போலி ஆதார் கார்டு மூலம் வங்கியில் வீட்டுக்கடன் வாங்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இந்த நூதன முயற்சியில் வினோத் குமார் மற்றும் அவரது கூட்டாளி யாதவ் காந்த், செந்தில் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதுபோன்று வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டார்களா என்று விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications