நாயை அடிக்கிற மாதிரி அடிக்கிறாங்க.. கதறியழுத ரவுடி.. பிளேடால் கழுத்தை அறுக்க முயன்றதால் பரபரப்பு!
சேலம் சிறையில் கைதி தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார்
Recommended Video
சேலம்: "நாயை அடிக்கிற மாதிரி எங்களை ஜெயில்ல அடிக்கிறாங்க.. மரியாதை இல்லை.. இவங்களை கேட்க யாருமே இல்லையா.. மனித உரிமை சங்கம் எல்லாம் என்ன செய்யறாங்க?" என்று கேட்டு ரவுடி ஒருவர் தன் பிளேடால் கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தை உலுக்கி உள்ளது.
சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ரவுடி தேவன் பிரகாசம். இவர் மீது ஏகப்பட்ட கொலை முயற்சி, திருட்டு, அடிதடி கேஸ்கள் உள்ளன. இதெல்லாம் நிலுவையில் உள்ளன. இப்போதைக்கு இவர் நாமக்கலில் வசித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமகிரிப்பேட்டை பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில் இவர் கைது செய்யப்பட்டு 2 மாதமாக விசாரணை கைதியாக சேலம் ஜெயிலில் உள்ளார்.

சித்ரவதை
இந்நிலையில் சிறை அதிகாரிகள் மற்றும் சிறைக்காவலர்கள் தரக்குறைவாக பேசி அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி, தேவன் பிரகாசம் பிளேடால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து பதறிய அங்கிருந்த சிறை காவலர்கள், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

சிகிச்சை வேணாம்
இதனால் கழுத்துப் பகுதியில் கைதிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் நியாயம் கிடைக்கும்வரை சிகிச்சை எடுத்து கொள்ள மாட்டேன் என்று முரண்டு பிடித்து வருகிறார் ரவுடி. அது மட்டுமில்லை.. கழுத்தில் வெட்டு காயங்கள் மிக ஆழமாக இருந்தும், ரவுடி சிறையில் நடந்த விவரங்களை விசாரிக்க வந்த போலீசாரிடம் கூறினார்.

பனிஷ்மெண்ட்
அப்போது, "ஜெயில்ல.. என்கூட சேர்த்து 4 பேரை என்னை ரொம்பவும் கொடுமைப்படுத்தி சித்ரவதை படுத்தறாங்க சூப்பிரண்ட்டு, ஜெயிலரு, இவங்க எல்லாம் தப்பு பண்ணல. இவங்களுக்கு எந்த விஷயமும் தெரியாது. சௌந்தரராஜன், இன்னும் சில போலீஸ்காரங்கதான் ரொம்ப மோசமா பேசறாங்க.. மரியாதையே இல்லை.. சாப்பாடு சரியில்லைன்னு சொன்னா அதுக்கு பனிஷ்மெண்ட்.. எச்ச துப்பினா அதுக்கு பனிஷ்மெண்ட்.. ஆனா எங்களை நாய் அடிக்கிற மாதிரி அடிச்சி போடறாங்க. அதை கேட்க ஆள் இல்லை.

மனித உரிமைகள் சங்கம்
என்கூட இருந்தவங்களையும் பனிஷ்மென்ட்ல பூட்டி வெச்சிருக்காங்க. இப்போ விஷயம் வெளியே தெரிந்ததும், அவங்களை ரிலீஸ் பண்ணி இருப்பாங்க. இப்போ போனீங்கன்னா, எங்களை அடிச்ச கம்பு, இரும்பு எல்லாம் இருக்கும். என்னையும் ரொம்ப சித்ரவதை பண்ணிட்டாங்க. மனித உரிமை சங்கம் எல்லாம் என்னா பண்றாங்க?" என்று கேள்வி எழுப்பினார் ரவுடி.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications