சேலம் தாதகாப்பட்டியில் வாடகை வீட்டில் குடும்ப பெண்களா இப்படி.. விசாரித்தால் பெரிய ட்விஸ்ட்
சேலம்: சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்தவர் வரதராஜன் என்பவர், நேற்று சண்முக நகர் தபால் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில பெண்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறினார்களாம். அவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் வந்து சோதனை செய்த போது, வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்வது உறுதியானது. இந்த விவகாரத்தில் பெண் புரோக்கர் கைதாகி உள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள சில 'ஸ்பா'க்கள், தங்கும் விடுதிகளில் விபச்சாரம் நடப்பதாக, போலீசாருக்கு அவ்வப்போது புகார்கள் ரகசியமாக வருவது உண்டு. அப்படி கிடைக்கும தகவல் அடிப்படையில், போலீசார் குறிப்பிட்ட மாநகர் முழுவதும் அடிக்கடி சோதனை நடத்துவதும் வழக்கமாக உள்ளது.

அப்படி சோதனை செய்யும் போது, ஸ்பாவில் விபச்சாரம் நடப்பது உறுதியானால், அதன் உரிமையாளர் கைது செய்யப்படுவார். அதேபோல் புரோக்கரும் கைது செய்யப்படுவார்கள். அங்கு மீட்கப்படும் இளம் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கை இன்று வரை தொடர்கிறது.
அதேபோல் சில பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் விபச்சாரம் செய்கிறார்கள். புரோக்கர்கள் துணையுடன் நகரில் குடும்ப பெண்கள் வசித்தபடி விபச்சாரம் செய்வது நடக்கிறது.. அப்படி ரகசியமாக இயங்கும் கும்பல்களை பொதுமக்களின் தகவலின் பேரில் போலீசார் பிடிக்கிறார்கள். சேலத்தில் சிக்கிய கும்பல் பற்றி பார்ப்போம்.
சேலம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த 48 வயதாகும் வரதராஜன் என்பவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சேலம் தாதாகாப்பட்டிசண்முக நகர் தபால் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில பெண்கள் வரதராஜனிடம் தங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளதாகவும், பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறினர். ஆனால் ஏற்க மறுத்த வரதராஜன், இது குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தாதகாப்பட்டி சண்முக நகரில் சிலர் விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சோதனை செய்தனர். தொடர்ந்து அங்கு வீடு வாடகைக்கு எடுத்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ராசிபுரத்தை சேர்ந்த பெண் புரோக்கர் சங்கீதா (34) என்பவரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 3 இளம்பெண்களை மீட்ட போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications