சேலத்தில் 7 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்த மளிகை கடைக்காரர் கைது
சேலம்: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தற்காக மளிகைக் கடைக்காரர் ஒருவரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் அல்லிக்குட்டை வள்ளுவர்நகர் பகுதியை சேர்ந்த 42 வயது ராமநாதன், அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மிட்டாய் வாங்க தனது கடைக்கு வந்த 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகச் சொல்லப் படுகிறது.
மேலும், கடையில் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என அச்சிறுமியை மிரட்டியும் உள்ளார். ஆனால், நேற்று அச்சிறுமி நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆவேசமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் ராமநாதனின் மளிகை கடையை முற்றுகையிட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் ராமநாதனை பிடித்து வீராணம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அவர் மீது புகாரளித்தனர்.
இதற்கிடையில் ராமநாதனை போலீசார் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர். தகவல் அறிந்த அல்லிக்குட்டை பொதுமக்கள், புகாரை வீராணம் போலீசாரே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் எனக் கூறி வீராணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ராமநாதனை கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications