கூட்டணி ஆட்சி.. அமித்ஷாவின் பேச்சுக்கு இதுதான் அர்த்தம்! அண்ணாமலைக்கு பாடம் எடுத்த ராஜேந்திர பாலாஜி
சேலம்: தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பேசிய அண்ணாமலைக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். 2011ஆம் ஆண்டு அதிமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக எதிர்க்கட்சியாகவும் அமைந்ததை போன்ற சூழல் மீண்டும் உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார். இந்த கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி, தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று பேசி வருகிறார். ஆனால் பாஜக தரப்பில் தொடர்ச்சியாகக் கூட்டணி ஆட்சி என்று சொல்லப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அண்ணாமலை பேசுகையில், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றிக் கூற முடியும்? அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறி இருக்கிறார். நயினார் நாகேந்திரனும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவார் என்று கூறினாலும், கூட்டணி ஆட்சி என்பதையே கூறி வருகிறார்.
இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் விவாதமாகி இருக்கிறது. இந்த நிலையில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், அமித்ஷா தனது பாணியில் கூட்டணி ஆட்சி என்று என்டிஏ கூட்டணியின் ஆட்சி எனத் தெரிவித்திருக்கிறார். அவர் கூட்டணி அரசாங்கம் என்று கூறவில்லை. எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று கூறிவிட்டார்.
அதேபோல் ஆட்சிக்கு வருவதற்கு அந்தந்த கட்சிக்கு பலம் இருக்க வேண்டும். அந்த பலம் அதிமுகவிடம் தான் இருக்கிறது. எந்த காலத்திலும் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை. அதிமுக தான் தமிழ்நாட்டில் என்டிஏ தலைமை என்று கூறிவிட்டார்.
அதிமுக - பாஜக கூட்டணி ஆளுங்கட்சியாக வரப் போகிறது. அதேபோல் எதிர்க்கட்சியாகவும் அதிமுக - பாஜக கூட்டணிதான் வரப் போகிறது. எப்படி 2011 அதிமுக - தேமுதிக இணைந்து போட்டியிட்ட போது, அதிமுக ஆளுங்கட்சியாகவும், தேமுதிக எதிர்க்கட்சியாக வந்ததோ, அப்படியான சூழல் மீண்டும் உருவாகும். இதற்கு நடுவில் சந்தில் சிந்து பாடுவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள்.
யாரின் கருத்தையும் யாரும் கேட்கத் தயாராகவில்லை. மக்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். இரு கட்சிகளின் தலைவர்களும் பேசிவிட்ட பின், என் கருத்தைக் கேட்கவில்லை என்று யாரும் பேசக் கூடாது. தெளிந்த நீரோடையில் கல்லெறியும் வேலையை செய்யாதீர்கள். அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையில் மக்கள் மத்தியில் மரியாதை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications