ஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில்.. பதறி போன பயணிகள்.. அதிர்ச்சி அடைந்த போலீஸ்!
சேலம்: ஓடும் ரயிலில்.. சீட்டுக்கு அடியில் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
ஜோலார்பேட்டையிலிருந்து சேலம் நோக்கி பயணிகள் ரயில் இன்று வந்துகொண்டிருந்தது. சேலம் பொம்மிடி அருகே வந்தபோது, ஒரு கம்பார்ட்மென்ட்டில் தங்களது சீட்டுக்கு கீழே பெண் குழந்தை ஒன்றின் சடலம் கிடந்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த குழந்தைக்கு 3 வயது இருக்கும் என தெரிகிறது. வடநாட்டவரின் குழந்தை போல உள்ளது. இதனால் உடனடியாக சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் பெண் குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்.
அந்த குழந்தை ஏற்கனவே உடம்பு சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதை போல தெரிகிறது. சிகிக்சை பெற்று வந்ததற்கான அடையாளங்கள் குழந்தையின் உடம்பில் தென்பட்டது. அதனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு குழந்தை இறந்திருக்கலாம் என தெரிகிறது.
ஆனால் யார் குழந்தை, எதற்காக சடலத்தை ரயிலில் விட்டுச்சென்றனர், என்பது குறித்தெல்லாம் விசாரணை நடந்து வருகிறது. ஓடும் ரயிலில் திடீரென குழந்தையின் சடலம் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை பயணிகளிடம் ஏற்படுத்தி விட்டது.












Click it and Unblock the Notifications