Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உப்பு போட்டு சோறு தின்பவன் பாஜகவில் இருப்பானா?.. சேலத்தில் அனல் கக்கிய ஆர்.எஸ்.பாரதி!

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் சரிசமமாக அமர்வதற்கு திமுகவே காரணம். இந்த வரலாறு தெரியாதவர்கள் பாஜகவிற்கு கொடி பிடிக்கிறார்கள். உப்பு போட்டும் சோறு சாப்பிடுபவர்கள் அந்தக் கட்சியில் இருக்கலாமா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சேலத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

RS Bharathi attacks BJP furiously at dmk meeting salem

இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "எமெர்ஜென்சிக்கு முன்பாக கோவை மாநகரத்தில் திமுக மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடுதான் வினை. அந்த மாநாடு மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் திமுக ஆட்சியையே கலைத்திருக்க மாட்டார்கள். அந்த மாநாட்டில் ஒருவர் மிகவும் வேகமாகப் பேசிவிட்டார். அந்த டேப்பை கேட்டுவிட்டுத்தான் இந்திரா காந்தி ஆத்திரமடைந்தார்.

1975ஆம் ஆண்டு தலைவர் கருணாநிதி ஒரு திட்டத்தை அறிவித்திருந்தார். விதவைகளுக்கு எல்லாம் இலவச தையல் மெஷின் கொடுக்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகமானது. கோவை மாநாட்டில் பேசும்போது ஒரு திமுக பேச்சாளர் தமிழ்நாட்டிலே கருணாநிதி அறிவித்துள்ல இலவச தையல் மெஷின் திட்டத்துக்கு இந்திரா காந்தி மனு போடலாம் எனப் பேசிவிட்டார். அதை அதே கூட்டத்திலேயே கருணாநிதி கண்டித்து விட்டார். ஆனால், உளவுத்துறை இந்திரா காந்தியிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டது.

தலைவர் கருணாநிதி ராஜராமை டெல்லிக்கு அனுப்பியபோது, இந்திரா காந்தி அவரைப் பார்த்ததுமே "உங்கள் முதலமைச்சர் எனக்கு தையல் மெஷின் கொடுப்பாராமே" என கோபமாகக் கேட்டுள்ளார். பின்னர், எமெர்ஜென்சியை பற்றி பேசாதீர்கள், அதை நாட்டு மக்களுக்காக கொண்டு வந்துள்ளேன் எனக் கூறி அனுப்பி விட்டார்.

இதைத் தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர் பயந்துபோய், தனது கட்சியின் பெயரையே மாற்றிக் கொண்டார். எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவன் நான். 1967, 1971 தேர்தல்களில் எம்.ஜி.ஆருக்கே டெபாசிட் கட்டியதே இந்தக் கைதான். அவருக்கு முதன்மை தேர்தல் முகவராக 2 தேர்தல்களிலும் இருந்தவன் நான். பல தலைவர்களும், திமுக எனும் பெயரை மாற்றிவிடலாம் எனக் கூறியும் கருணாநிதி மறுத்துவிட்டார்.

RS Bharathi attacks BJP furiously at dmk meeting salem

இத்தனைக்கும், அந்த தலைவர்களில் யாருடைய குடும்பத்தினரும் கைது செய்யப்படவில்லை. கருணாநிதி குடும்பத்தில் இருந்து தான் 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒருவர் முரசொலி மாறன். இன்னொருவர் ஸ்டாலின். தனது குடும்பத்தில் இருவர் சிறையில் அடைக்கபட்ட போதும், இயக்கத்தின் பெயரை மாற்ற முடியாது என உறுதியாக இருந்தார். அதனால் தான் இன்றைக்கு கறுப்பு சிவப்பு கொடி இருக்கிறது.

நேற்று பிறந்தவன் எல்லாம் நமக்கு சவால் விடுகிறான். நம் தொண்டர்கள் கட்சிக்கு ஒரு சோதனை என்று வந்துவிட்டால் எதையும் பார்க்க மாட்டார்கள். சில நாட்களுக்கு முன்னால் கவர்னர் ஒரு மாதிரியாகப் பேசிவிட்டார் என்பதற்காக நம் தொண்டர்கள் ஆக்ரோஷம் ஆனதன் விளைவாக 4 மணி நேரத்தில் உத்தரவைப் திரும்பப் பெற்றார். அவன் தான் திமுக தொண்டன்.

ஆடு மேய்த்தவனை எல்லாம் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக்கினார் கருணாநிதி. ஆனால், பாஜக, ஐபிஎஸ் அதிகாரியை எல்லாம் ஆடு மேய்க்க வைக்கிறது. பன்றி மேய்க்க விடுகிறது. அப்போதெல்லாம் துறை செயலர்கள் என்று எடுத்தால் எல்லோரும் பிராமணர்களாக இருப்பார்கள். கருணாநிதி முதல்வர் ஆனதும் 1970ல் தலைமை செயலர் பதவி காலி ஆனது. சீனியாரிட்டி அடிப்படையில் அந்த பதவி பெற வேண்டியவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்த மணி ஐ.சி.எஸ்.

ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைமை செயலர் ஆக்க வேண்டும் என்பதற்காக, அந்த மணி ஐ.சி.எஸ்ஸை திட்டக் குழுவை உருவாக்கி அதன் தலைவராக நியமித்து விட்டு, தலைமை செயலராக இ.பி.ராயப்பா என்ற வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவரை தலைமை செயலர் ஆக்கியவர் கருணாநிதி. முதன்முதலில் தலைமை செயலர் நாற்காலியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இ.பி.ராயப்பாவை அமர வைத்தவர் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி. அன்றைக்குத்தான் நமக்கும் துக்ளக் சோவுக்கும் தகராறே ஆரம்பித்தது.

அன்று ஐகோர்ட்டில் ஜட்ஜ் தொடங்கி, வாதாடுபவர்கள் வரை எல்லாருமே பஞ்சகட்சம், டர்பன் கட்டிய அவாள் தான். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இட ஒதுக்கீட்டின் காரணமாகவே இன்று ஐகோர்ட்டில் தலைப்பாகை ஒன்றையும் காணோம். இதையெல்லாம் செய்ததால் தான் பாஜகவினர் நம்மை இப்படி எதிர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் சரிசமமாக அமர்வதற்கு திமுகவே காரணம். இந்த வரலாறு தெரியாதவர்கள் பாஜகவிற்கு கொடி பிடிக்கிறார்கள்.

திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் இல்லை என்றால் தமிழ்நாடு 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடும். பட்டை போட்டவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லை. அன்று கோவிலுக்குள் நாம் செல்ல முடியுமா? நாங்கள் கடவுள் விரோதிகள் அல்ல. நாங்கள் தான் உண்மையான இந்துக்கள். குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் விடவில்லை. இன்றைய குடியரசுத் தலைவரை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை திறக்கும் நிகழ்வுக்கு வரவில்லை. உப்பு போட்டும் சோறு சாப்பிடுபவர்கள் அந்தக் கட்சியில் இருக்கலாமா?

மோடி போன்ற கேடி உலகத்திலேயே இல்லை. முக ஸ்டாலினை கும்மிடிப்பூண்டியை தாண்டினால் தெரியாது என அண்ணாமலை சொன்னார். ஆனால், மோடி மத்திய பிரதேசத்தில், அந்தமானில் போய் ஸ்டாலினை பற்றி பேசுகிறார். மார்ச் 1ஆம் தேதி மோடிக்கு கேடு காலம் பிறந்துவிட்டது. அன்றுதான் முதல்வர் ஸ்டாலின், "அடுத்த தேர்தலில் யார் பிரதமராக வரவேண்டும் என்பதல்ல, யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்" என பிரகடனம் செய்தார்.

பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துவிட்டன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு'இந்தியா' என்ற பெயர் வைத்தவுடன் மோடிக்கு ஜன்னி வந்துவிட்டது. இன்னும் 6 மாதம் மட்டும் தான் மோடியின் ஆட்சி இருக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெறுவோம்" எனப் பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+