சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வறுமையிலும் தானம்.. அரசு கொடுத்த ரூ 2000+ உண்டியல் பணம் ரூ 1000- அப்படியே நிவாரணமாக கொடுத்த சிறுவன்

Google Oneindia Tamil News

சேலம்: 8 வயது சிறுவன் தன்னுடைய குடும்பம் வறுமையான சூழ்நிலையில் இருந்த போதும் தங்களுடைய குடும்ப அட்டைக்கு வந்த 2000 ரூபாய் மற்றும் தான் உண்டியலில் சேர்த்து வைத்த ஆயிரம் ரூபாய் என மூன்று ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சி வீடியோ சேலத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    வறுமையிலும் தானம்.. அரசு கொடுத்த ரூ 2000+ உண்டியல் பணம் ரூ 1000- அப்படியே நிவாரணமாக கொடுத்த சிறுவன்

    கொரோனா இரண்டாம் அலை தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் தாமாக முன்வந்து அதிக அளவில் நிதி வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

    அதன்படி தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதிகளை வழங்கி வருகின்றனர்.

    இரண்டாம் வகுப்பு

    இரண்டாம் வகுப்பு

    இந்த நிலையில் சேலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தன்னுடைய குடும்பம் மிகப்பெரிய வறுமையில் இருந்த பொழுதும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீது கொண்டுள்ள பாசத்தால் தங்களுடைய குடும்ப அட்டைக்கு தமிழக அரசு வழங்கிய 2000 ரூபாய் மற்றும் தான் உண்டியலில் சேர்த்து வைத்த ஆயிரம் ரூபாய் என மூன்று ஆயிரம் ரூபாய் பணத்தை தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

    வீடியோ

    வீடியோ

    மேலும் அந்த மாணவன் வீடியோவில் "முதலமைச்சர் தாத்தா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை. ஆனால் தற்போது உங்களை சந்திக்க முடியவில்லை. உங்கள் மீது நான் கொண்ட அன்பு பாசத்தின் காரணமாக நீங்கள் கோரிக்கை வைத்தது ஏற்றுக் கொண்டு எங்களால் முடிந்த இந்த சிறிய தொகையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளோம்.

    வீடியோ வைரல்

    வீடியோ வைரல்

    இவ்வாறு சிறுவன் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ சேலம் மாவட்டம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தன்னுடைய குடும்பம் உணவிற்கு இன்றி கஷ்டப்படும் நிலையிலும் முதல்வருக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் நிவாரண நிதி வழங்கும் இந்த வீடியோ அனைத்து மக்களின் மனதில் ஒரு நெகிழ்ச்சியையும் தானும் உதவ முன் வர வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சிறு துளி பெரு வெள்ளம்

    சிறு துளி பெரு வெள்ளம்

    இந்த சிறுவனை போல் ஏராளமான சிறுவர்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி உதவி வருகிறார்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் சிறிய தொகையாக இருந்தாலும் அதை பொது சேவைக்கு அனுப்ப வேண்டும் என்ற இந்த எண்ணம் இந்த சிறுவர்கள் மனதில் தோன்றியது வரவேற்கத்தக்க விஷயமாகும்.

    English summary
    8 Years old boy gives Government's Corona relief Rs 2000 to CM corona relief fund.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X