தலைவாழையிலை.. சேலத்தில் ஒரே ஆச்சரியம்.. இனிமேல் தமிழகத்துக்கு "ஏலியன்" வருகை அதிகரிக்குமாமே.. அடடடா

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் ஒரு ஆச்சரியம் நடந்து வருகிறது.. இதுகுறித்த செய்திகளும், போட்டோக்களும்தான் இணையத்தில் கடந்த 2 நாட்களாகவே வட்டமிட்டு கொண்டிருக்கிறது.

சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டியை அடுத்துள்ளது ராமகவுண்டனூர்.. இங்கு லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார்.. இவர் ஏலியன் (வேற்றுகிரகவாசி) கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்... மல்லமூப்பம்பட்டி வழியில் மூலக்கடை பஸ் ஸ்டாப் அருகே ராமகவுண்டனூரில் உள்ளது இந்த ஏலியன் கோவில்...

Salem shivling

ஏலியன்களுக்கு கோவில் என்பதே ஆச்சரியமாக பார்க்கப்படும்நிலையில், ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும் வந்து செல்வது அதைவிட ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.

சேலம்: கடந்த 2021ம் ஆண்டு முதல் இந்த கோவிலை கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகிறதாம்.. இந்த கோவில் சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

பாக்யா என்ற லோகநாதனுக்கு 45 வயதாகிறது.. இந்த கோயிலை கிட்டத்தட்ட முக்கால் ஏக்கர் நிலத்தில் நிறுவியுள்ளார்... சிவலிங்கத்தில் இருந்து பூமிக்கு அடியில், 11 அடி ஆழத்தில், அவரது குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமாதி அருகே ஏலியன் சித்தர், அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன... நித்ய பூஜைகள் நடந்து வரும்நிலையில், லிங்கம், சித்தர், முனிவருக்கு தேய்பிறை, வளர்பிறை பஞ்சமி திதியில், மாலை, 6:00 மணிக்கு பூஜை நடத்தி அன்னதானமும் வழங்கப்படுகிறது.

சிவன் லிங்கம்: இதை பற்றி லோகநாதன் கூறும்போது, "வேறு எங்கும் இல்லாதபடி சக்திதேவி, பார்வதிதேவி, சிவன் தெய்வங்கள் ஒருங்கிணைந்த லிங்கமாக நிறுவப்பட்டுள்ளது.. சிவன் இரட்டை ஆருடை லிங்கமாக காட்சி தருகிறார்... இந்த கோவிலில் நான்முக முருகன், ஐந்து முக காளி, தாமரை மலர் பலிபீடம், கருங்கற்களால் இரட்டை கொடிமரம் நிறுவப்பட்டுள்ளன.

ஜடாமுனி, காமதேனு, காலபைரவர், ராமர், மதுரை மீனாட்சி, நந்தி போன்றவை நிறுவப்பட்டு வருகின்றன. திருப்பணி முடிந்ததுமே கும்பாபிஷேகம் நடக்கும்... நடக்கிறது. கும்பாபிஷேகத்துக்கு பிறகு அனைத்து வித பூஜை செய்யப்படும்.. இனிமேல் ஏலியன்களின் வருகை அதிகமாகும்.. இவர்கள் யாருக்கும் எந்த தீங்கையும் செய்ய மாட்டார்கள்.. உலக அழிவிலிருந்து காக்கும் ஒரே தெய்வம் ஏலியன் மட்டுமே" என்கிறார்.

வாழையிலை: அதுமட்டுமல்ல, ஏலியன் வழிபாடு குறித்து விரிவாகவே சொல்கிறார்.. "உப்பு போடாமல் பச்சரிசி சாதத்தை, 3 தலைவாழை இலையில் அதனை படைக்க வேண்டும்.. முறையாக தியானம் செய்யும்போது, ஏலியன் சக்தி கிடைக்கும்.. முதலில் ஏலியன் இருப்பதை மனதார நம்ப வேண்டும். பிறகு 22 நிமிஷம் தியானம் செய்தால், உங்களுக்கு தேவையானதை பெறலாம்.

தியானம் செய்யும்போது, தழைவாழையிலை மீது விரித்து, அதில் உட்கார வேண்டும். நமக்கு முன்பே ஒருவாழையிலை, பின்பக்கம் முதுகில் வாழையிலைகளை கட்டிக்கொண்டுதான் இந்த தியானத்தை செய்ய வேண்டும் அப்போதுதான் அவர்களின் கதிர்வீச்சுத்தன்மை நம்முடைய உடல் மீது பாதிக்காமல், பச்சையம் தடுத்துவிடும். இதனால் பாதிப்புகளும் நமக்கு ஏற்படாது" என்கிறார்.

வியப்பு: குஷ்புவிற்கு நம்முடைய ஊரில் கோவில் கட்டினார்கள்... அதேபோல ரஜினிக்கு கட்டினார்கள்.. பிரதமர் மோடிக்கும் கோவில் கட்டப்பட்டுள்ளது.. ஆனால், ஏலியன்களுக்கு கோவில் எப்பது இப்போதுதான் முதல்முறையாக கட்டப்படுகிறது.. இந்த போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+