சேலத்தில் 10 ஏக்கர் நிலம்..உடல் எடையை குறைக்கும் நிபுணரிடம் ஜீவனாம்சம் கேட்ட மனைவி..அதுக்கு இப்படியா
சேலம்: சேலத்தில் உடல் எடையை குறைக்கும் நிபுணரை கொலை செய்தது யார் என்று போலீசார் தீவிரமான விசாரணையில் இறங்கினர்.. 3 நாட்களுக்கு பிறகு உண்மை குற்றவாளியை கைது செய்துள்ளனர்.. ஏற்கனவே 7 பேர் கைதான நிலையில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கொடூர கொலை செய்தவர்கள் யார் தெரியுமா? ஏன் தெரியுமா?
சேலம் மாவட்டம் சங்ககிரியில் திருச்செங்கோடு சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). உடல் எடையை குறைக்கும் நிபுணராக பணியாற்றி வருகிறார்.. இவரது மனைவி பெயர் ராணி.. 53 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், அரவிந்த் என்ற 29 வயது மகனும் இருக்கிறார்கள்.. இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது.

வாடகை சென்டர்
உடல் எடையை குறைக்கும் வகையில், நியூட்ரிசன் சென்டருக்கு தினமும் சிலர் வந்து அதற்கான மருந்துகளை வாங்கி செல்வது வழக்கமாக இருந்துள்ளது.. அந்தவகையில், 3 நாட்களுக்கு முன்பு, நியூட்ரிசன் சென்டருக்கு பழனியம்மாள் என்ற பெண் காலை, 9.30 மணிக்கு வந்தபோது, உடம்பெல்லாம் பலத்த வெட்டு காயங்களுடன் ராஜேந்திரன் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர், சங்ககிரி போலீசாருக்கு தகவல் தந்தார்.
போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, அருகிலுள்ள சிசிடிவி கேமராக்கள் வைத்து ஆய்வு செய்யப்பட்டது..
மனைவி போலீசில் புகார்
இதனிடையே, ராஜேந்திரனை கொலை செய்தது குறித்து, அவரது மனைவி ராணி போலீசில் புகார் கொடுக்கவும், அந்த புகாரின்படி சங்ககிரி போலீசாரும் வழக்குப்பதிவு விசாரணையை கையில் எடுத்தனர்.
அப்போதுதான் ராஜேந்திரன் தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காணமாக கடந்த 25 வருடங்களாகவே இவர்கள் பிரி்ந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.. வாடகை வீட்டில்தான், உடல் எடையை குறைக்கும் நிபுணராக தொழில் செய்து வந்திருக்கிறார் ராஜேந்திரன். கடந்த மார்ச் 31ம் தேதி ராஜேந்திரனை மர்ம கும்பல் வெட்டி சாய்த்துள்ளது.
கூலிப்படை கும்பல்
அந்த மர்ம கும்பல் யார் என்று விசாரணை ஆரம்பமானது. இறுதியில் ஆர்எஸ் கரிமேடு பகுதியைச் சேர்ந்த மனோஜ் குமார் (31), கஸ்தூரிப்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் (21) உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.. அந்த 7 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோதுதான், ராஜேந்திரனின் மனைவிக்கும், மகனுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸார் சொல்லும்போது, "தம்பதி இருவரும் பிரிந்து வந்த நிலையில், ராஜேந்திரனிடம் ஜீவனாம்சம் கோரி ராணி வழக்கு தொடர்ந்துள்ளார்.. இதில், ராணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.
ஆனால், இதை எதிர்த்து ராஜேந்திரன் அப்பீல் செய்துள்ளார்.. அத்துடன், தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தையும், மனைவிக்கும், மகனுக்கு தர மறுத்துள்ளார். இந்த 10 ஏக்கர் நிலம் ரூ.10 கோடி மதிப்பு பெறுமாம். இந்த ஆத்திரத்தில்தான், மனைவியும், மகனும் சேர்ந்து கூலிப்படையை ஏவி ராஜேந்திரனை கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. இப்போது கணவரை கொன்ற ராணி, மகன் அரவிந்த்தை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..!!












Click it and Unblock the Notifications