கருப்பு கலர் பெயிண்ட்டை கருணாநிதி சிலை மீது ஊற்றி.. சேலத்தில் இரவோடு இரவாக நடந்த அவமதிப்பு! பரபரப்பு
சேலம்: சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கருப்பு பெயிண்ட் வீசப்பட்டுள்ளது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் துரிதமாக தொடங்கி நடத்தி வருகிறார்கள். எனினும், கருணாநிதி சிலை அவமதிப்பு சம்பவம் திமுகவுக்குள் பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த குறிச்சி பஸ் ஸ்டாப் பகுதியில், அருநுாற்றுமலை நெடுஞ்சாலை அருகே, காமராஜர், எம்.ஜி.ஆர்., அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் உள்ளன. இதற்கு அருகே வைக்கப்பட்டிருந்த திமுக கொடி கம்பம், சமீபத்தில் அகற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் அங்கு, இரவோடு இரவாக, முன்னாள் முதல்வர், திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு, 6 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலறிந்த வந்த வாழப்பாடி வருவாய்த்துறையினர், வாழப்பாடி போலீசார், அப்பகுதிக்கு சென்று, அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலை குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
இந்நிலையில், மீண்டும் சேலம் மாவட்டத்தில் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது.. சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது.. இந்த உருவச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்டுள்ளது..
ஆனால் சிலை மீது பெயிண்ட்டை ஊற்றியது யார்? என்ன காணம் என்று தெரியவில்லை.. எனவே, அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியின் சிலைக்கு அவமதிப்பு செய்த இந்த விவகாரம் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
கடந்த 2 வருடங்களுக்குமுன்பு, சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 1,713 சதுரடி பரப்பில் 4 அடி உயரத்தில் பீடமும், 16 அடி உயரத்தில் முழுஉருவ வெண்கல சிலையும் நிறுவப்பட்டது.. இந்த சிலை சுமார் ரூ.75 லட்சம் செலவில் 1,817 சதுரடி பரப்பளவில் 4 அடி உயரத்தில் பீடத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்திருந்தார்.
இந்த சிலையைதான் தற்போது மர்மநபர்கள் அவமதித்துள்ளதாக கூறப்படுகிறது.. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள் யார் என்ற விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications