சேலத்தில் நடுரோட்டில் மது போதையில் பெண்ணைத் தாக்கிய ஆசாமி.. பொதுமக்கள் கொடுத்த மறக்க முடியாத பரிசு
சேலம்: சேலத்தில் மது போதையில் கர்நாடகாவைச் சேர்ந்த காருக்கு வழிவிடாமல் தகராறு செய்து பெண்ணைத் தாக்கிய போதை ஆசாமியை பொதுமக்கள் அடித்து விரட்டினர். அப்போது அந்த பெண் மற்றும் போதை ஆசாமிக்கு இடையே நடந்த உரையாடல்கள் வீடியோவாக சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
மது போதை ஆசாமிகள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தவது அதிகமாக நடந்து வருகிறது.இது ஒருபுறம் எனில் குடித்துவிட்டு சாலைகளில அட்டூழியம் செய்வதும் அடிக்கடி நடக்கிறது. காலியிடங்கள் எல்லாவற்றிலும் பிளாஸ்டிக் கப்புகளும், தண்ணீர் காலி பாட்டில்களும் அதிகமாக காணப்படுகின்றன. மதுபாட்டில்களும் பல இடங்களில் உடைக்கப்பட்டு வீசப்படுகின்றன. இவை சுற்றுச்சூழலை கடுமையாக பாதிக்கின்றன.

மறுபுறம் குடிகாரர்கள் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதால், அப்பாவிகள் உயிரிழப்பது அடிக்கடி நடக்கிறது. விபத்திற்கு காரணம் மது போதையில் சுயநினைவு இன்றி, தன்னிலை மறந்து வாகனம் ஓட்டுவது தான் காரணம்.. குடித்துவிட்டால் தூங்காமல், சாலைகளில் சுற்றி பலரையும் துன்பத்திற்கு உள்ளாக்குவது தமிழகத்தில் சர்வ சாதாரண நிகழ்வாக மக்கள் கடந்து செல்லும் வகையில் இருக்கிறது.
குடித்தால் என்ன நடக்கும்: பலரும் குடித்த உடன், மது நேரடியாக வயிற்றுக்குள் சென்று அப்படியே சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதாகவே நினைக்கிறார்கள். ஆனால், போகிற வழியில் உள்ள உடல் பாகங்களை கடுமையாக பாதிக்கிறது என்பது குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்..
ஆல்கஹால் நேரடியாக வயிற்றைத் தாண்டி சிறுகுடல் பெருங்குடல் பகுதிகளுக்கு செல்வதுடன், அங்கு ஆல்ஹகால் ஆல்டிகைடு என்ற சேர்மமாக உடைக்கப்படுகிறது. பின்னர் மதுபானம் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் உள்ள ரத்தம் அனைத்தும் கல்லீரல் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறது. ரத்தம் வரியாக கல்லீரலுக்கு சேதத்தை உண்டாக்கும் ஹெபட்டோடாக்சிக் கூறான ஆல்டிகைடு கல்லீரலை அடைகிறது. எனவே மிக குறைவான நேரத்தில் அதிகமாக ஆல்கஹாலை அருந்தும்போது இந்த சேர்மம் அதிமாகி கல்லீரல் செயலிழப்பு வரை ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதனால் மது அருந்தியவர்கள் சுயநினைவை இழந்து புத்தி தடுமாறி நடக்கிறார்கள்.. அவர்கள் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கே தெரியாத அளவிற்கு சில சமயங்களில் மாறுகிறது.. அப்படித்தான் சேலம் மாவட்டம் புளியம்பட்டி அருகே கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதி சென்று கொண்டிருந்த காரை , மது போதையில் சென்ற நபர் தகராறில் ஈடுபட்டடதாக புகார் எழுந்ததது. மேலும் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை பொதுமக்களே அடித்து விரட்டினர்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications