Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவியின் தலையில் "ஸ்குரூ டிரைவரை" இறக்கிய கணவர்.. இப்படியொரு காரணமா? சேலத்தில் கொடுமை

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் நடுரோட்டில் மனைவியை ஸ்குரு டிரைவரால் குத்தியுள்ளார் கணவர்.. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது . இது தொடர்பாக கணவரை கைது செய்த போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை வண்டிக்காரன் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன்... இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் பிருந்தா. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.

salem auto driver

ஆனால், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அடிக்கடி ஏற்பட்டதாக தெரிகிறது.. இதனால் ஒருகட்டத்தில் கணவரை விட்டு பிருந்தா பிரிந்து சென்றுவிட்டார்.. கடந்த 2 வருடங்களாகவே நாமக்கல்லில் தனியாகவே வசித்து வந்திருக்கிறார். இதனால், பிள்ளைகள் 2 பேருமே மணிகண்டனிடம்தான் வளர்ந்து வருகின்றன..

இந்நிலையில், சம்பவத்தன்று, வேலை விஷயமாக, சேலத்திலிருந்து நாமக்கலுக்கு மணிகண்டன் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது, நாமக்கல் மோகனூர் சாலையில், பிருந்தா இன்னொரு நபருடன் பைக்கில் சென்றுள்ளார்..

அதிர்ச்சி: தன்னுடைய மனைவி வேறு ஒரு நபருடன் பைக்கில் செல்வதை கண்டு, அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், பிருந்தா சென்ற பைக்கை பின்தொடர்ந்து சென்றார்.. பிறகு, அந்த பைக்கை முந்திச்சென்று, வழிமறித்தும் நிறுத்தினார். கணவனை ரோட்டில் கண்டதுமே பிருந்தாவுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து தம்பதி இருவருக்கும் வாக்குவாதம் வெடித்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரூ டிரைவரை எடுத்து, பிருந்தாவின் தலையில் வேகமாக குத்தினார்.. இதில், ஸ்குரூ டிரைவர், பிருந்தாவின் மண்டையில் இறங்கியது.. இதனால், வலியால் கதறி துடித்தார் பிருந்தா.. ரத்தம் கொட்டிய நிலையில், சாலையிலேயே சரிந்து விழுந்தார்... இதைப்பார்த்து பொதுமக்கள், உடனடியாக பிருந்தாவை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்... பின்னர் போலீசுக்கும் தகவல் தந்தனர்..

விசாரணை: இதையடுத்து, போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.. பிறகு, மணிகண்டன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை சேலம் மத்திய சிறையிலும் அடைத்துள்ளனர்.

அதாவது, மணிகண்டனின் தம்பி யுவராஜூடன், பிருந்தாவுக்கு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இது தொடர்பாகவே தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது. பிறகு, 2 வருடங்களுக்கு முன்பு, யுவராஜூடனேயே வாழ முடிவெடுத்து, அவருடன் சென்றுவிட்டாராம் பிருந்தா. தற்போது இருவரும் நாமக்கல்லில் வசித்து வருகிறார்கள்.

பரபரப்பு: சம்பவத்தன்று நாமக்கல்லுக்கு மணிகண்டன் சென்றபோதுதான், அவரது தம்பி யுவராஜூவும், பிருந்தாவும் பைக்கில் சென்றதை பார்த்து கொந்தளித்து தகராறு செய்திருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்த மனைவியை, கணவர் ஸ்குரு டிரைவரால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+