ரேஷன் கடைகள்.. மாதம் 20 ஆயிரம் ‘மாமூல்'.. வசமாக சிக்க வைக்கப்பட்ட போலீஸ் ஏட்டு.. சேலத்தில் ட்விஸ்ட்
சேலம்: மாதம் ரூ.20 ஆயிரம் 'மாமூல்' கொடுத்து விட்டு ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறிய புகாரில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டு பிரபாவதியை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் இலவசமாக ரேஷனில் அரிசி கிடைப்பதால் அதை மக்களிடமும், சில கடைகளில் மொத்தமாக வாங்கியும் வெளிமாநிலங்களுக்கு கடத்துவது அதிகமாக நடக்கிறது. கர்நாடகா மாநிலத்திற்குத்தான் ரேஷன் அரிசி அதிக அளவு கடத்தப்படுகிறது. மூட்டை மூட்டையாக லாரிகளில் கடத்துவோர் சோதனை சாவடிகளில் சிக்கிவிடுகிறார்கள். அப்படி சிக்குவோர் போலீசுக்கு எதிராக திரும்பினால் எப்படி இருக்கும்... அப்படியான ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்த 30 வயதாகும் தங்கராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சேலத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஏட்டுக்கள் பிரபாவதி, மணி ஆகிய 2 பேர் தன்னிடம் மாதம் ரூ.20 ஆயிரம் 'மாமூல்' கொடுத்து விட்டு ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்து கொள்ளலாம் என்று கூறியதாக புகார் அளித்தார்.
பின்னர் மாமூல் வாங்கிய புரோக்கர் குமரேசன் என்பவரை கடந்த புதன்கிழமை கைது செய்தனர். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு பெண் போலீஸ் ஏட்டு பிரபாவதியை நேற்று கைது செய்தனர். தலைமறைவான ஏட்டு மணியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதனிடையே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் , வேண்டுமென்றே மாட்டிவிடும் நோக்கில் தங்கராஜ் செயல்படுவதாகவும், அவரை கைது செய்த காரணத்தால் இப்படி பழிவாங்கி உள்ளதாவும் சந்தேகத்ததில் உள்ளனர். ஏனெனில் தங்கராஜ் கடந்த 2022-ம் ஆண்டு கருப்பூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரேஷன் அரிசியை பெங்களூரு கடத்தி செல்லும்போது போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஜாமீனில் வந்த அவர், கடந்த அக்டோபர் மாதம் கொண்டலாம்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய போது 2-வது முறை கைது செய்யப்பட்டிருக்கிறார்
இவர், ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடும் கெடுபிடி மேற்கொண்டு வந்தால் வேண்டுமென்றே தங்கராஜ் புகார் அளித்து இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இதையும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், தங்கராஜிடம் தனியாக விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை கண்டுபிடிக்க விசாரிக்க தொடங்கி உள்ளனர். அ , கைதானவர்களை காவலில் எடுத்து விசாரித்த பிறகும்தான் இந்த விவகாரத்தில் உண்மை நிலவரம் தெரிய வரும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications