சேலம் அரசு ஊழியருக்கு தீபாவளி பரிசு.. மாநகராட்சி ஆபிஸிலேயே மறக்க முடியாத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: வருவாய் துறை, சார்பதிவாளர், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பட்டா, பத்திரம், பத்திரப்பதிவு, சொத்து வரி, வாரிசு சான்றிதழ், சொத்து வரி பெயர் மாற்றம், நிலத்தை அளவீடு செய்தல் உள்பட பல்வேறு சேவைகளை பெறுவதற்கு லங்சம் கேட்பவர்களை கையும் களவுமாக சிக்க வைக்கலாம். அப்படித்தான் சேலத்தில் சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்வதற்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கையும் களவுமாக கைது செய்தனர்.

அரசு ஊழியர் ஒருவர், தன் வாழ்நாளில் சிக்க கூடாத வழக்கு என்றால், அது லஞ்சம் வாங்கிய வழக்கு தான். லஞ்சம் வாங்கியதாக வழக்கில் சிக்கினால், அவர் எத்தனை வருடம் ஆனாலும் தண்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.. லஞ்ச வழக்கில் சிக்குவோருக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைக்கிறது. அதேநேரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட ஒரே நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வரும்.

salem government employee bribe

சஸ்பெண்ட் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு ரத்து செய்யப்பட்டு பணிக்கு திரும்புவோர், மீண்டும் அதேபோன்ற வழக்கில் சிக்கினால், அவர்கள் பெரிய சிக்கலை சந்திப்பார்கள். தற்போதைய நிலையில், பல அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதாகி வருகிறார்கள். ஆனாலும் லஞ்சம் வாங்குவது குறைவது இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் பலர் நிலம் சம்பந்தமான விவகாரங்களில் லஞ்சம் வாங்கி கைதாவது தொடர்கதையாக உள்ளது. அப்படித்தான் சேலத்தில் நடந்துள்ளது.

சேலம் அழகாபுரம் மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்த 31 வயதாகும் சாஜூ என்பவர் அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். இந்த வீட்டுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்து வசூலிப்பதற்காக மாநகராட்சியின் பில் கலெக்டரான கிச்சிபாளையத்தை சேர்ந்த 45 வயதாகும் ராஜா என்பவர் சென்றுள்ளார். அப்போது அவர் சாஜூவிடம் சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்வதற்கு லஞ்சமாக ரூ.35 ஆயிரம் கேட்டிருக்கிறாராம். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து பில் கலெக்டர் ராஜா அவரிடம் பேரம்பேசி ரூ.30 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும் சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்து கொடுக்கிறேன் என்று தெரிவித்தார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சாஜூ இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து சாஜூவிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கொடுத்து அனுப்பினார்கள். சாஜூ போலீசாரின் அறிவுரைப்படி, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பில் கலெக்டர் ராஜாவிடம் அவர் ரூ.30 ஆயிரத்தை வழங்கியிருக்கிறார். அப்போது அங்கு ஏற்கனவே சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று ராஜாவை கையும், களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தார்கள், மேலும் அவர் இருந்த அறை மற்றும் வெளியே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். பின்னர் அவரை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.இந்த சம்பவத்தால் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+