"பச்சை கம்பு".. அடித்து போட்டுட்டு.. அவர் பாட்டுக்கு போய்ட்டே இருந்தாராம்.. பதற வைத்த எஸ்ஐ பெரியசாமி
ஆத்தூர் முருகேசனை அடித்து கொன்ற எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
சேலம்: முருகேசனை தாறுமாறாக அடித்து ரத்த வெள்ளத்தில் விழச்செய்துவிட்டு, போலீஸ்காரர் பெரியசாமி அவர் பாட்டுக்கு போய்க் கொண்டே இருந்தாராம்.. சேலத்தில் கம்பால் அடித்தே உயிரிழந்த விவசாயி மரணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் திறக்கப்படாததால், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களுக்கு சென்று, மது பாட்டில்களை குடிமகன்கள் வாங்கி வருகின்றனர்..
அந்த வகையில் இடையப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்ற விவசாயியும், நண்பர்கள் 2 பேரை அழைத்து கொண்டு பைக்கில், மதுவாங்க பாப்பநாய்க்கன்பட்டி என்ற ஊர் வழியாக சென்று, திரும்பி வந்து கொண்டிருந்தார்.

செக்போஸ்ட்
அங்குள்ள செக்போஸ்ட்டில் டியூட்டி பார்த்து கொண்டிருந்த எஸ்ஐ பெரியசாமி, முருகசேனை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளார்.. மது வாடை வந்துள்ளது.. அதனால், முருகேசனின் பைக்கை பிடுங்கிவைத்து கொண்டுள்ளார் பெரியசாமி.. இதுதான் வாக்குவாதமாக முற்றியுள்ளது.. போலீசையே எதிர்த்து பேசுறியா என்று ஆத்திரம் அடைந்து, அங்கிருந்த ஒரு தடிமனான பச்சை கம்பை எடுத்து வந்து முருகேசனை சரமாரியாக பெரியசாமி அடித்ததாக தெரிகிறது.

முருகேசன்
அங்கிருந்தோர் எல்லாம் இதை பார்த்து பதறி உள்ளார்.. வேண்டாம் அடிக்காதீங்க என்று கெஞ்சி உள்ளனர்.. ஆனால், உடம்பெல்லாம் அடித்து கொண்டிருந்தவர், திடீரென முருகேசனின் தலையின் பின்புறத்திலும் ஓங்கி அடித்துவிட்டார்.. அதில்தான் வலி பொறுக்க முடியாமல் முருகேசன் கீழே விழுந்து சரிந்தார்.. பின்பக்கமாகவே தலை தரையில் மோதி உடைந்துள்ளது.. வலியால் தரையிலேயே துடிதுடித்துள்ளார் முருகேசன்.

செல்போன்
இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்ததே இன்னொரு போலீஸ்காரர்தானாம்..தாக்குதல் சம்பவத்தை தடுக்க முடியாமலே, இந்த வீடியோ எடுத்துவிட்டார். காட்டுமிராண்டித்தனமாக முருகேசனை அடித்துவிட்டு, பெரியசாமி அவர் பாட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டாராம்.. ரோட்டிலேயே முருகேசன் துடிதுடித்துள்ளார்..

வீடியோ
பிறகுதான் 108 ஆம்புலன்ஸ் வந்து அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளது.. இறுதியில் முருகேசன் இறந்தே விட்டார். இந்த தாக்குதல் வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திலேயே பெரியசாமியை போலீசார் கைது செய்துவிட்டனர்.. ஆனால், இதற்கு பிறகுதான் பெரியசாமி குறித்த விஷயமே வெளியே தெரிய வந்துள்ளது..

பெரியசாமி
தண்ணி அடித்துவிட்டு வருபவர்கள், அல்லது மதுபாட்டில்களை கடத்தி கொண்டு வருபவர்களை பிடிக்க வேண்டும் என்பதுதான் எஸ்ஐ பெரியசாமியின் டியூட்டி.. அதனால்தான் செக்போஸ்ட்டில் டியூட்டி போட்டுள்ளனர்.. ஆனால், இவரால் டியூட்டி போட்டதில் இருந்து யாரையுமே பிடிக்க முடியவில்லையாம்.. அந்த கோபத்தைதான் முருகேசனிடம் காட்டி உள்ளதாக தெரிகிறது.

சஸ்பெண்ட்
இப்போது பெரியசாமியை சஸ்பெண்ட் செய்தாலும், அவர் மீதான கோபம் இன்னும் யாருக்கும் தணியவில்லை.. நல்லவேளையாக, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.. விரைவில் முருகேசனின் அநியாய மரணத்துக்கும் ஒரு நியாயம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.. பார்ப்போம்..!












Click it and Unblock the Notifications