Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லட்சம் லட்சம் மதிப்பில் தங்க கட்டிகள்.. சேலம் ஆம்னி பஸ்ஸில் யாரிது? சங்ககிரி செக்போஸ்ட்டில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சேலம்: தங்கம் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.. இன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,270க்கும், சவரனுக்கு ரூ.82,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.8,510க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.68,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்துக்கான விலை இனியும் உயரும் என்று நிபுணர்கள் சொல்லிவரும் நிலையில், தங்க நகைகளை கொள்ளை அடிப்பது, தங்கத்தை கடத்துவது போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்தபடியே உள்ளன. சேலத்தில் என்ன நடந்தது?

சங்ககிரி அருகே வைகுந்தம் டோல்கேட்டில் நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.. கோவையில் இருந்து நேற்றிரவு 10.30 மணிக்கு, தனியார் சொகுசு ஆம்னி பஸ் ஒன்று, 24 பயணிகளை ஏற்றுக்கொண்டு புதுச்சேரி நோக்கி கிளம்பியிருக்கிறது.

Gold Biscuits Salem Omni Bus

சொகுசு ஆம்னி பஸ்

ஈஸ்வரன் (45), மணிவண்ணன்(40) என்ற பேரும் இந்த தனியார் சொகுசு ஆம்னி பஸ்ஸில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்கள். இரவு 12.45 மணிக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி வைகுந்தம் டோல்கேட் அருகே ஆம்னி பஸ்ஸை ஓட்டி வந்தநிலையில், பயணிகள் டீ குடிப்பதற்காக பஸ் நிறுத்தப்பட்டது.

அப்போது கோவையை சேர்ந்த சங்கர் (45) என்ற பயணி, பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி வந்து டீ குடித்துவிட்டு, மறுபடியும் பஸ்ஸில் ஏறி தன்னுடைய சீட்டில் உட்கார்ந்து கொண்டார்.. அப்போதுதான் தன்னுடைய பை மாயமாகியிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.. அந்த பையில் 3 கிலோ தங்க கட்டிகளை வைத்திருந்தாராம்..

சங்ககிரி செக்போஸ்ட்

டீ குடித்துவிட்டு வருவதற்குள் பையை காணவில்லை என்று டிரைவர்களிடமும், பயணிகளிடமும் சொல்லி அழுதார்.. இதையடுத்து சங்ககிரி போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேற்கொண்டனர்..

கோவையில் உள்ள சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான தங்க நகை செய்யும் பட்டறையில் சங்கர் வேலை பார்த்து வருகிறாராம்.. கடந்த 25 வருடங்களாகவே வேலை பார்ப்பதால் பட்டறை ஓனருக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கி வந்துள்ளார்.

தங்க கட்டிகள்

நேற்றைய தினமும், நகைகள் விற்பனை செய்வது தொடர்பாக கோவையில் இருந்து புதுச்சேரிக்கு 3 கிலோ நகையுடன், சங்கர் பஸ்ஸில் கிளம்பி வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது..

இதையடுத்து, போலீசார் பஸ்சில் இருந்த பயணிகள், டிரைவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அதே பஸ்ஸில், விஜிபாபு என்ற இளைஞர் கோவையில் ஏறியிருக்கிறார்.. சங்கர் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு பக்கத்தில் அவர்தான் உட்கார்ந்து வந்துள்ளார்..

ஆம்னி பஸ்ஸில் தங்க கட்டி

வைகுந்தம் டோல்கேட்டில் பஸ் நின்றபோது விஜிபாபு மட்டும் இறங்கியிருக்கிறார்.. அதற்கு பிறகு அவர் பஸ்ஸில் ஏறவில்லை என்பது தெரியவந்தது.. உடனே போலீசாருக்கு அந்த இளைஞர் மீது சந்தேகம் திரும்பியது.. அந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை.. எனவே, அவரை விவரங்களை சேகரித்து கொண்டிருக்கிறார்கள்..

பஸ்சில் தங்க கட்டிகளுடன் சங்கர் ஏறியதை பார்த்து, பின்தொடர்ந்து வந்து இந்த கொள்ளை நடந்ததா? தெரியவில்லை.. விசாரணை நடக்கிறது..

இதே சங்ககிரி டோல்கேட்டில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் இப்படித்தான், மூன்று கிலோ தங்க, வைர நகைகள் பஸ்சில் களவாடப்பட்டது.. இதில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பெங்களூருவில் கைதானார்கள்.. இப்போது மீண்டும் அதேபோன்ற சம்பவம் சங்ககிரியில் நடந்துள்ளதும், 3 கிலோ தங்க கட்டிகள் மாயமானதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+