மது அருந்திவிட்டு ஜாலியாக இருந்தோம்.. குழந்தை அழுதது.. சுவரில் ஒரே அடி! சேலம் கள்ளக்காதல் ஜோடி பகீர்
சேலம்: உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததாக குழந்தையை தாயும் அவருடைய கள்ளக்காதலனும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே புதூர்காடம்பட்டியில் தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார் மல்லேஷ். அதே சூளையில் சக்திவேல் என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

சக்திவேல் புதுவடவள்ளியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருடைய மனைவி கலைவாணி. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. தனது வீட்டுக்காரருடன் பணியாற்றும் மல்லேஷுடன் கலைவாணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் சக்திவேலுக்கு தெரிந்தால் அவரால் மல்லேஷுடன் பிரியும் நிலை ஏற்பட்டுவிடுமே என நினைத்த கலைவாணி, மல்லேஷுடன் உல்லாசமாக இருக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் அவரை பார்க்காமல்கூட இருக்க முடியவில்லை.
இதனால் இனி மல்லேஷுடன் சென்றுவிடலாம் என முடிவு செய்து அதன்படி கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு கணவருக்கு தெரியாமல் மல்லேஷுடன் சென்றுவிட்டார். இருவரும் ஓமலூர் அருகே புதூர்காடம்பட்டியில் வீடு எடுத்து தங்கினர். ஜீவனத்திற்காக இருவரும் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவருக்கும் திருமணமே ஆகாவிட்டாலும் தம்பதி என சொல்லியே வேலை கேட்டுள்ளனர்.
ஆனால் மல்லேஷுக்கு கலைவாணியின் மீது ஒரு வித ஈர்ப்பு இருந்தாலும் அவருடைய குழந்தை சதா சர்வகாலமும் அழுது கொண்டே இருப்பதும், உல்லாசமாக இருக்கும் நேரத்தில் கலைவாணி ஓடி போய் குழந்தையை சமாளிப்பதுமாக இருந்ததால் குழந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது சிறிய சிறிய தகராறு கூட வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று "நீ என்னுடன் வந்துவிட்டாய், அப்படியிருக்கும் போது யாருக்கோ பிறந்த குழந்தை நமக்கு எதற்கு? நாம் பார்க்கும் வேலையில் கிடைக்கும் ஊதியம் வயிற்றுக்கும் வாய்க்குமே போதவில்லை. இதில் குழந்தையை வேறு வளர்க்க வேண்டுமா என மல்லேஷ் கேட்டுள்ளார். இதையடுத்து இருவரும் உட்கார்ந்து மது அருந்தியுள்ளனர்.
பிறகு இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அந்த நேரம் பார்த்து குழந்தை அழுதுள்ளது. இதனால் சமாதானம் செய்ய சென்ற கலைவாணியை தடுத்த மல்லேஷ், அவரிடம் இந்த குழந்தை தமக்கு வேண்டாம் என கூறிய நிலையில் இருவரும் மீண்டும் குடித்தனர். அப்போது தலைக்கேறிய போதையில் இருந்த நிலையில் குழந்தை மீண்டும் அழுதது. உடனே கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் அந்த குழந்தையை சுவற்றில் அடித்துள்ளனர்.
இதில் குழந்தை படுகாயமடைந்தது. மறுநாள் குழந்தையை ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் குழந்தை சீரியஸாக இருந்ததால் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. இதையடுத்து குழந்தை இறந்த சம்பவத்தை சொல்ல குழந்தையின் பெற்றோரை மருத்துவமனை நிர்வாகம் தேடிய போது அவர்கள் தப்பிவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தாரமங்கலம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கர்நாடகாவில் கலைவாணியும் மல்லேஷும் தலைமறைவாக இருப்பதாக போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். கலைவாணிக்கு சக்திவேல் 3 ஆவது கணவராம். அவருக்கு முன்பு இருவரை திருமணம் செய்து கொண்டு அவர்களை விட்டு ஓடி வந்து சக்திவேலையும் திருமணம் செய்த கலைவாணி, மல்லேஷுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியுள்ளார். கலைவாணி, மல்லேஷுடன் நடத்திய விசாரணையில் இருவரும் மதுஅருந்தியது, உல்லாசமாக இருந்தது, குழந்தை அழுதது உள்ளிட்டவற்றை கூறியதுடன் சுவற்றில் அடித்து கொன்றதையும் ஒப்புக் கொண்டனராம்.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications