ஊழல் புகாரில் சிக்கியவருக்கு பணி நீட்டிப்பா? சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு கடும் எதிர்ப்பு!
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம், தமிழக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு மனு அளித்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அரசு செலவில் அலுவலர்களை தனது தனிப்பட்ட நிறுவனங்களுக்காக பயன்படுத்தியதாகவும், பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் காவல்துறையில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், சில மாதங்களுக்கு சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். துணைவேந்தர் ஜெகநாதன் தனியாக கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதில் அரசு அலுவலர்களை பயன்படுத்தியதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேஷன் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி அதில் பல்வேறு நபர்களை பங்குதாரராக இந்த பவுண்டேஷனில் இணைத்து தனி நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும், அரசு ஊழியர் வர்த்தகம் சார்ந்த நிறுவனத்தை தொடங்க அனுமதி இல்லாத நிலையில் துணைவேந்தர் ஜெகநாதன் பங்குதாரராக இருந்துள்ளது உறுதி செய்யப்பட்டதால் ஜெகநாதன் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2.66 கோடி நிதியில் ஊழல் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டியலின மாணவர்கள் சாரிபில் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. மோசடி மற்றும் முறைகேடு வழக்கில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அளித்துள்ளனர். ஊழல் புகாரில் சிக்கிய ஜெகநாதனை பணி நீட்டிப்பு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆளுநர், முதலமைச்சருக்கு 500 பக்கங்கள் கொண்ட மனுவை அனுப்பியுள்ளனர். அதில், இம்மாத இறுதியில் பணிநிறைவு செய்ய உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை பணி நீட்டிப்பு செய்ய தீவிர முயற்சி நடந்து வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல் நடந்ததை உள்ளாட்சி தணிக்கைத்துறை ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. 2021-ல் துணைவேந்தராக பதவியேற்ற ஜெகநாதன் பதவியேற்றது முதல் சர்ச்சைக்குரிய செயல்பாடுகளையே முன்னெடுத்து வருகிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், கடந்த 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவரது பதவி காலத்தை நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கக்கூடாது என கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications