மதுபோதையில் மாணவி.. சில்லிட்ட சேலம்! எல்லாத்துக்கும் காரணமே 'குவாட்டர்’ கோவிந்தசாமி! வலிப்பு வேற!
சேலம் : சேலத்தில் மது போதையில் பள்ளி மாணவி மீட்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பலாத்கார முயற்சியில் இரும்பு வியாபாரி ஈடுபட முயன்றதும், மாணவிக்கு வலிப்பு வந்ததால் அவரை சாலையோரம் இறக்கி விட்டுச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெண்கள் குறிப்பாக சிறுமியர்களுக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளத்தக்க வகையில் இருக்கிறது.

குறிப்பாக பள்ளி கல்லூரிகளில், ஆசிரியர்கள், பணியாளர்களால் சிறுவர்- சிறுமியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்களும், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பணியிடங்கள், மாடு மேய்க்கச் செல்லும் காட்டுப் பகுதியிலும் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபடுகின்றனர். அந்த வகையில் சேலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சேலம் அழகாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 16 வயதுடைய பிளஸ் 1 மாணவி சாலையோரம் மயங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளுபடி கிடந்தார். இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவி அதிக அளவிலான மது போதையில் இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக தகவல் அறிந்த அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் அஸ்வினி மற்றும் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கஸ்தூரி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
குறிப்பாக அம் மாணவியை இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் அழைத்து வந்து விட்டு சென்றதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் ராமன் குட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கோவிந்தசாமி பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சாலையோரம் மதுபோதையில் மீட்கப்பட்ட சிறுமி அதே பகுதியில் இருந்த மற்றொரு இரும்பு கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கோவிந்தசாமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் நேற்று முன்தினம் சிறுமியை அங்குள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மதுவை ஊற்றி குடிக்க வைத்துள்ளார்.
சிறுமியும் அதனை குடித்துள்ளார். சிறுமி என்பதால் அதிகளவிலான போதை தலைக்கேறி உள்ளது. இதனை பயன்படுத்தி சிறுமியிடம் பலாத்கர முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளார். ஆனால் திடீரென அச்சிறுமிக்கு வலிப்பு வந்தது. இதனால் பயந்து போனவர் உடனடியாக சிறுமியை இரு சக்கர வாகனத்தில் ஏற்றி வந்து ரோட்டோரம் இறக்கிவிட்டு சென்றது விசாரணையில் தெரிவந்துள்ளது.
இதனிடையே கோவிந்தசாமி மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அம்மாபேட்டை மகளிர் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக மாணவிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications