நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரிக்கு சம்மன்! மோசடி புகாரால் சேலம் போலீஸ் அதிரடி! பரபர தகவல்
சேலம்: பணமோசடி புகார் தொடர்பாக நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரிக்கு சேலம் சூரமங்கலம் போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
நடிகையாக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் நமீதா. தற்போது பாஜகவில் செயல்பட்டு வருகிறார். இவரது கணவர் பெயர் வீரேந்திர சவுத்ரி. எம்எம்எஸ்இ புரோமோஷன் கவுன்சிலிங் அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் தேசிய தலைவரான மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமன், அமைப்பு செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ் மற்றும் தமிழக தலைவராகவும் கூறப்படும் நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எப்படி கடன் வழங்குகிறது? என்பது பற்றி எடுத்துரைக்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழில் முனைவோருக்கு மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதோடு இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசியக்கொடி மற்றும் தேசிய சின்னம் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது தேசியக்கொடியை உரிய அனுமதியின்றி காரில் பயன்படுத்தி உள்ளனர். மேலும் பேனரிலும் தேசிய சின்னத்தை அவர்கள் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இது விவாதத்தை கிளப்பியது.
இதற்கிடையே தான் சம்பவம் தொடர்பாக சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த கோபால் சாமி என்பவர் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில், ‛‛எம்எஸ்எம்இ புரோமோஷன் கவுன்சிலிங் அமைப்பின் தமிழ்நாடு தலைவர் பதவிக்கு என்னிடம் முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ரூ.4 கோடி கேட்டனர். இதில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் பதவி தரவில்லை. அதோடு பணமும் தரவில்லை.
இதையடுத்து விடாப்பிடியாக கேட்ட நிலையில் ரூ.9 லட்சத்தை தந்துவிட்டு ரூ.41 லட்சம் தரவில்லை. இந்த பணத்தை வாங்கி தர வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் தலைவர் பதவியை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரிக்கு கொடுத்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பிறகு முத்துராமன் மற்றும் துஷ்யந்த் யாதவ் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் தான் தற்போது நடிகை நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி மற்றும் முத்துராமனின் உதவியாளர் மஞ்சுநாத் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். இருவரும் இன்று இரவுக்குள் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாலை 3.30 மணி வரை அவர்கள் ஆஜராகவில்லை. இதனால் இன்று அவர்கள் ஆஜராவார்களா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications