ஹேப்பி பர்த்டே ஜீசு.. 200 அடியாட்கள் புடை சூழ.. கேக் வெட்டி பர்த்டே கொண்டாடிய சேலம் ரவுடி
அரிவாளால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சேலம்: சென்னை அருகே முன்பு ரவுடி பினு ரவுடிகள் புடை சூழ அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடிய நிலையில் இப்போது சேலம் அருகே அதே போன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.
ரவுடிகள் எல்லாம் இப்போது துளிர் விட்டுப் போய்த் திரிகின்றனர். சுதந்திரமாக செயல்படுகிறார்கள். துணிச்சலுடன் எல்லா செயல்களையும் செய்கிறார்கள். பொதுமக்கள் பாடுதான் படு திண்டாட்டமாக உள்ளது.
சென்னை அருகே முன்பு ஒரு ரவுடிக் கும்பல் ஒன்று கூடி அரிவாளால் கேக் வெட்டி பயமுறுத்தினர். பின்னர் போலீஸார் அவர்களை கூண்டோடு கைது செய்தனர். ரவுடி பினு அதில் முக்கியமானவர்.

பிறந்த நாள்
இந்த நிலையில் அதேபோல ஒரு சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது. சேலம் கிச்சீபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜீசு. இவருக்கு நேற்று பிறந்த நாளாம். இதையடுத்து தனது பிறந்த நாளை சக ரவுடிகள் படை சூழ கொண்டாடியுள்ளார்.

3 அடி நீளம்
எப்படி தெரியுமா.. கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள். பட்டப்பகலில் சேலம் அருகே மலை அடிவார பகுதியில் கேக்கினை சுமார் 3 அடி நீளம் கொண்ட கத்தியால் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார் ஜீசு. அதற்கான ஏற்பாடுகளை ஜீசுவுடன் சுற்றி வரும் சக ரவுடிகள் செய்திருந்தனர்.

வெட்டவெளி
அந்த பிறந்தாள் விழாவில் சேலத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட ரவுடிகளும் பங்கேற்றுள்ளனர். பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு மது பாட்டில்களும் பரிமாறப்பட்டுள்ளன. 200 பேரும் வெட்ட வெளியில் மது அருந்தி ஜீசுவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பு
போலீஸார் இப்படிப்பட்ட ரவுடிக் கும்பலை சுதந்திரமாக நடமாட முடியாமல் முடக்க வேண்டும் என்பதும், அவர்களை கட்டோடு ஒழிக்க வேண்டும் என்பதுமே மக்களின் சாதாரண எதிர்பார்ப்பாக உள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications