சேலம் "அண்ணி" பாஜக பிரபலமா?.. கொழுந்தன் சலூன்கடைக்காரருக்கு இதெல்லாம் தேவையா? சாந்தி ரொம்ப பாவம்
சேலம்: சேலத்தில் பாஜக பிரமுகரை கொலை செய்த சலூன்கடைக்காரரை கொன்றுவிட்டார்கள்.. இதுகுறித்த விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.. என்ன நடந்தது சேலம் மாவட்டத்தில்?
சேலம் பெரியகொல்லப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாநிதி.. 38 வயதாகிறது.. இவர் கோரிமேடு பகுதியில் சலூன் கடை ஒன்றை சொந்தமாகவே நடத்தி வருகிறார்..

இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் இருக்கிறார்கள்.. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் கருணாநிதியின் மகள், திடீரென ஒரு இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த கல்யாணத்துக்கு கருணாநிதியின் அண்ணி உதவியதாக தெரிகிறது.
அண்ணி சாந்தி: அந்த அண்ணி பெயர் சாந்தி.. மகளின் காதல் திருமணத்துக்கு தன்னுடைய அண்ணியே மூலகாரணமாக இருந்திருக்கிறார் என்பது கருணாநிதிக்கு தெரியவந்ததுமே கொந்தளித்து போனார்.. அதனால், அண்ணியின் கழுத்தை அறுத்து கருணாநிதி கொலை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அன்னதானப்பட்டி போலீசார் கருணாநிதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.. சில நாட்களுக்கு முன்புதான் கருணாநிதி ஜாமீனில் வெளியே வந்தார்.
கருணாநிதிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.. அப்படித்தான் நேற்றைய தினமும் மதுபாட்டில் வாங்கி கொண்டு, கோரிமேடு கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கம் அருகே உள்ள காலிமனைக்கு போனார்... அங்கு உட்கார்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.. அப்போது திடீரென 3 பேர் கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் சூழ்ந்து கொண்டு, கருணாநிதியை சரமாரியாக வெட்ட துவங்கினார்கள்.
அடங்காத கும்பல்: இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கருணாநிதி, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.. உயிரை கையில் பிடித்து கொண்டு கருணாநிதி ஓடியபோது, இந்த கும்பலும் பின்னாடியே அரிவாளுடன் சென்று அவரை வெட்டி சாய்த்தது.. கருணாநிதி ரத்தவெள்ளத்திலேயே கீழே சரிந்து விழுந்தார்.. ஆனாலும் அந்த கும்பல் அடங்காமல், கீழே விழுந்து கிடந்த கருணாநிதியின் கழுத்தை கொடூரமாக அறுத்தது.. இதில் கருணாநிதி அங்கேயே துடிதுடித்து இறந்துபோனார்.
அதற்கு பிறகுதான் அந்த 3 பேரும் அங்கிருந்து சாவகாசமாக பைக்கை எடுத்து கொண்டு சென்றிருக்கிறார்கள். இந்த கொலை குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
அண்ணி: யார் இவர்கள்? எதற்காக கருணாநிதியை கொன்றார்கள் என்று தெரியவில்லை.. அண்ணியை இப்படித்தான் கழுத்தை அறுத்து கருணாநிதி கொன்றார். அதுபோலவே, கருணாநிதியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர். அதனால், அண்ணி கொலைக்கு பழிக்குப்பழி நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்த விசாரணையை மேற்கொள்ள முயன்றபோதுதான், அண்ணி தரப்பை சேர்ந்தவர்கள் சிலர், நேற்றைய தினம் சேலத்தில் இருந்து வெளியேறினார்களாம்.. அவர்கள் வெளியூர் சென்றார்களா? போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டனரா? என்றும் தெரியவில்லை. இந்த மொத்த சந்தேகங்கள் குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளனர் சேலம் போலீஸார்...!
ராஜேஸ்வரி: கொலை செய்யப்பட்ட கருணாநிதியின் மகள் பெயர் ராஜேஸ்வரி.. அன்னதானப்பட்டியை சேர்ந்த மோகன்லால் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார்.. இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்ததுமே, கருணாநிதி தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதாம்.. அதனால்தான், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி, காதலனை மணந்துள்ளார்.
ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறியதற்கு கருணாநிதியின் அண்ணி சாந்தி உதவியிருக்கிறார் என்பதை கேள்விப்பட்டதுமே கருணாநிதிக்கு ஆத்திரம் வந்துள்ளது. அதனால்தான் நேரடியாகவே சென்று சாந்தியிடம் தகராறு செய்து, கழுத்தையும் அறுத்து கொன்றாராம்.. அதுமட்டுமல்ல, கொலையான சாந்தி, பாஜகவின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினராம்..!!












Click it and Unblock the Notifications