சேலம் சங்கீதா.. தண்ணீரில் "கரைந்துபோன" மாத்திரைகள்.. ஏட்டு மனைவி அவசரப்பட்டுட்டாரோ? யாரந்த பெண்?

Subscribe to Oneindia Tamil

சேலம்: இளம் மனைவி எடுத்த விபரீத முடிவு, ஒட்டுமொத்த சேலத்தையும் அதிர வைத்து வருகிறது.. மருமகன் மீது மாமனார் புகார் தந்திருக்கும் நிலையில், இது தொடர்பான விசாரணையை போலீசார் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.. எனினும், இதன் பரபரப்பு அடங்கவில்லை.

சேலத்தில் போலீஸாக இருப்பவர் கோவிந்தராஜ்.. 38 வயதாகிறது.. அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்... மனைவி பெயர் சங்கீதா.. 34 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு ரோகித் (7), தர்ஷிகாஸ்ரீ(5) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. கொண்டலாம்பட்டி போலீஸ் குடியிருப்பின் 3வது மாடியில், கோவிந்தராஜ் குடும்பத்துடன் வசித்து வந்து வந்துள்ளார்

salem policeman

விமல்குமார்: சம்பவத்தன்று காலையில் கோவிந்தராஜ் வழக்கம்போல் டியூட்டிக்கு சென்றுவிட்டார்.. அப்போது சங்கீதாவின் அண்ணன் விமல்குமார், சங்கீதாவை போனில் அழைத்துள்ளார்... ஆனால் சங்கீதா போன் எடுக்கவேயில்லை..

அதனால் டியூட்டியில் இருந்த கோவிந்தராஜிடம் இதுகுறித்து விமல்குமார் சொல்லி உள்ளார்.. இதனால் சந்தேகமடைந்த கோவிந்தராஜ், உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தபோது, 2 குழந்தைகளும் சடலமாக கிடந்தனர்.. குழந்தைகளுக்கு பக்கத்திலேயே சங்கீதா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அலறினார்.

போஸ்ட் மார்ட்டம்: இதுகுறித்து தகவலறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் விரைந்து, 3 பேரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவங்கினார்கள்.. அப்போதுதான், 2 குழந்தைகளுக்கும் விஷ மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து கொடுத்துவிட்டு கொன்றுவிட்டு, அவர்களை தூக்கில் தொங்கவிட்டு, அதன்பிறகு சங்கீதாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இதுதொடர்பாக கோவிந்தராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தம்பதிக்குள் குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது... கடந்த 3 மாதமாகவே கோவிந்தராஜூக்கும், சங்கீதாவுக்கும் இடையே நிறைய பிரச்சனையும், சண்டையுமாக இருந்ததாம்.. கோவிந்தராஜுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கலாம் என்பதே சங்கீதாவின் முக்கிய சந்தேகமாக இருந்திருக்கிறது.

அதிக சந்தேகம்: சந்தேகம் அதிகமானதால் குடும்பத்தில் பூசலும் அதிகமாகியிருக்கிறது.. சம்பவத்தன்றும் தம்பதிக்குள் சண்டை வந்ததாக தெரிகிறது.. இதனால் மனம் உடைந்த சங்கீதா, தன்னுடைய குழந்தைகளை கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்..

இதனிடையே, சங்கீதா 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டதால், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரளாக மருத்துவமனைக்கு குவிந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. சங்கீதாவின் அப்பா, கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் கோவிந்தராஜ் மீது புகார் செய்துள்ளார்.

ஆனால், மனைவி, குழந்தைகளின் சடலத்தை பார்த்ததுமே, அலறி துடித்த கோவிந்தராஜூம் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. நேற்று ஒரே நாளில் 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாராம்.. ஆனால், அவரை போலீசார் காப்பாற்றிவிட்டார்கள்.. தற்போது மாமனார் அளித்த புகாரின்பேரில் கோவிந்தராஜுவிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+