சேலம் சில்லி சிக்கன் பிரியர்களே உஷார்.. வவ்வால் வறுவலாம்! வனத்துறையிடம் சிக்கிய வேட்டையர்கள்
சேலம்: பழந்தின்னி வவ்வால்களை பிடித்து, அதை வறுத்து விற்பனை செய்து வந்த வேட்டையர்களை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரில் பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் வவ்வால்களை பரவலாக பார்க்க முடியும். எனவே சில கிராம மக்கள் தீபாவளிக்கு கூட வெடி வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பழந்தின்னி வவ்வால்களை சுட்டு, அதை சில்லி சிக்கன் என்று விற்பனை செய்து வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இங்குள்ள தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. இதனையடுத்து உள்ளூர் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
தகவலையடுத்து டேனிஷ்பேட்டை வனச்சரகர் விமல்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள், நேற்று வனப்பகுதியில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்தனர். ரோந்தில் பொதுமக்கள் சொன்னதை போல துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர தேடுதலை மேற்கொண்டனர் தேடுதலில் இரண்டு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இருவரும் பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.
இவர்கள் ஏற்கெனவே பன்னப்பட்டி பகுதியில் வவ்வால் தோப்பு பகுதியில் வேட்டையாட முயன்றிருக்கின்றனர். அங்கு ஒரே மரத்தில் லட்சக்கணக்கான வவ்வால்கள் இருந்திருக்கின்றன. ஆனால் அப்பகுதி மக்கள் வவ்வால்களை தெய்வமாக வணங்கி வருவதால் அவற்றை வேட்டையாட அனுமதிக்கவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் காட்டுக்குள் புகுந்திருக்கின்றனர்.
வேட்டையில் ஈடுபட்டவர்கள் டேனிஷ்பேட்டையை சேர்ந்த கமல் மற்றும் செல்வம் என்பது விசாரணையில் தெரிய வந்திருந்தது. மட்டுமல்லாது, வேட்டையாடிய வவ்வால்களை வெட்டி சுத்தம் செய்து, அதை சில்லி சிக்கன் என்று கூறி பொரித்து விற்பனை செய்து வந்திருக்கின்றனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
வவ்வால்களில் பல வகைகள் இருக்கின்றன. அதில் பழந்தின்னி வவ்வால்கள் தனித்துவமானவை. இந்த வகை வவ்வால்களுக்கு கண் பார்வை கூர்மையாக இருக்கும். இரவில்தான் வேட்டைக்கு கிளம்பும். பொதுவாக பழங்களையும், பூக்களிலிருந்து தேனையும், சில சமயங்களில் சிறு பூச்சிகளையும் இது சாப்பிடும். இருப்பினும் மனிதர்களால் சாப்பிட கூடாத உயிர்களில் இதுவும் ஒன்று.
ஏனெனில் வவ்வால்கள் அசுத்தமான பகுதியில்தான் வசிக்கும். இந்த வகை வவ்வால்கள் நிபா, எபலோ உள்ளிட்ட வைரஸ்களை கொண்டிருக்கும். வவ்வால்களுக்கு இந்த வைரஸால் பிரச்சனை இல்லை. ஆனால் மனிதர்களுக்கு ஆபத்து. வவ்வால்கள் கடித்த பழங்களை தின்பது, அதன் எச்சங்களை சுவாசிப்பது போன்றவற்றின் மூலம் இந்த வைரஸ்கள் மனிதர்களுக்கு பரவும். பழந்தின்னி வவ்வால்களை சாப்பிடுவதன் மூலமும் இந்த வைரஸ்கள் மனிதர்களை தாக்கும். சில நேரங்களில் மனிதர்களை இந்த வைரஸ் கொல்லவும் செய்யும்.
எனவே வவ்வால் கறி தடை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, வனத்துறையும் வவ்வால்களை வேட்டையாட தடை விதித்திருக்கிறது. எனவே இதனை வேட்டையாடி விற்ற இருவரை வனத்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications