Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலம் டூ பெங்களூர் ரோட்டில் "அலைபாயுதே".. தாலிக்கொடி கிட்ட துணி.. காட்டுக்குள்ளே பாவம் இந்த பொண்ணு

Subscribe to Oneindia Tamil

சேலம்: ஆடு மேய்க்க சென்றவர்கள், காட்டுக்குள் பெண்ணை பார்த்துள்ளனர்.. அதற்கு பிறகுதான், போலீசாருக்கு தகவல் சொல்ல, விஷயம் அம்பலமானது.. என்ன நடந்தது சேலத்தில்?

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ளது ஜோடுகுளி என்ற காட்டுப்பகுதி.. இங்கு புலிக்குத்தி முனியப்பன் என்ற கோயில் உள்ளது.. இந்த கோயிலுக்கு பக்கத்திலேயே பெண் ஒருவர் இறந்துகிடப்பதாக தீவட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், விரைந்து சென்ற போலீசார் சடலத்தை ஆய்வு செய்தனர்.

Salem to Bangalore and why did Bangalore IT employee take sudden decision

செருப்பு: அந்த பெண்ணுக்கு 20 வயதிருக்கலாம் என்று தெரியவந்தது.. அவரது சடலத்துக்கு பக்கத்தில் செருப்பு, தாலிக்கொடி என சிதறிகிடந்தன.. அவரது கழுத்தில் கொடூரமாக குத்தி கொன்றுவிட்டு, அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக முகத்தை சிதைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருப்பதையும் போலீசார் கண்டனர். பிறகு விசாரணையையும் துரிதமாக கையில் எடுத்தனர்.

அந்த பெண்ணின் பெயர் கோகிலாவாணி என்பதும், சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கம்போஸ்ரோடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், தெரியவந்தது. இவர் அரியானூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் பாராமெடிக்கல் 4ம் ஆண்டு மாணவியாம்.. வழக்கம்போல் காலேஜூக்கு வந்தபோது, திடீரென வெளியில் செல்வதாக சொல்லிவிட்டு போயிருக்கிறார். அப்போதுதான் அவரை கொலை செய்துள்ளது தெரியவந்தது.

கோகிலாவாணி: இதையடுத்து, போலீசார் கோகிலவாணியை கொலை செய்தது யார்? என்ற அடுத்த விசாரணையில் இறங்கினர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த முரளிகிருஷ்ணா என்பவரின் பெயர் அடிபட்டது.. ஐடி கம்பெனி ஊழியரான இவர், எம்சிஏ பட்டதாரியும்கூட.. 24 வயதாகிறது.. இவருடன்தான், கோகிலாவாணி அடிக்கடி வெளியில் சுற்றித்திரிந்து வந்தாராம். இதனால், முரளிகிருஷ்ணாவை பிடித்து போலீசார் வீசாரித்தனர்.. அப்போதுதான் மொத்த உண்மையும் தெரியவந்தது.

கோகிலாவாணியின் பாட்டி பெங்களூரில் இருக்கிறாராம்.. சில வருடங்களுக்கு முன்பு, கோகிலாவாணியின் அம்மாவும், முரளிகிருஷ்ணாவின் சித்தியும் ஒரே கார்மென்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார்கள்.. அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. பிறகு மேச்சேரியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்கு முரளிகிருஷ்ணாவின் குடும்பம் மாற்றலாகி வந்துவிடவும், கோகிலாவாணியுடன் பழக்கம் தொடங்கியது.

குடும்ப ரீதியான பழக்கம், இறுதியில் இவர்களுக்குள் காதலாகிவிட்டது.. ஒரு கட்டத்தில் 2 பேருமே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால், வீட்டில் ஒருவேளை சம்மதிக்காமல் போய்விட்டால் என்ன செய்வதென்று இருவருமே கலங்கினர். அதனால், வீட்டுக்கு தெரியாமல், ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, சேலத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து, கோகிலாவாணிக்கு தாலி கட்டினார் முரளிகிருஷ்ணா.

அலைபாயுதே: அதற்கு பிறகு, அலைபாயுதே படத்தில் வருவதுபோல, கல்யாணம் முடிந்ததும், அவரவர் வீட்டுக்கு ஆளுக்கொரு பக்கம் வந்து, தனித்தனியே வாழ துவங்கினர்.. கோகிலாவாணி வழக்கம்போல் காலேஜுக்கு சென்றார்.. பெங்களூரு ஐடி கம்பெனியில் முரளிகிருஷ்ணா வேலைபார்த்தாலும்கூட, அடிக்கடி லீவில் வந்து, காதல் மனைவியை சந்தித்துவிட்டு போவாராம்.. சில சமயம், பெங்களூருக்கு பைக்கிலேயே அழைத்துக்கொண்டு போவாராம்.

இப்படிப்பட்ட சூழலில், கோகிலாவாணிக்கு, கல்லூரியில் மாணவர் ஒருவர் பழக்கமானார்.. அந்த மாணவரிடம் கோகிலாவாணி நெருங்கி பேசி வந்துள்ளார்.. அத்துடன், முரளிகிருஷ்ணாவிடம் சரியாக பேசாமல், அவரை அவாய்ட் செய்து வந்துள்ளார்..

தொற்றிய பயம்: ஒருவேளை தன்னுடைய மனைவி, தன்னைவிட்டுபிரிந்து போய்விடுவாரோ? என்று முரளிகிருஷ்ணா பயந்துவிட்டார். அதனால், போனை போட்டு, அந்த இளைஞர் குறித்து, கோகிலாவாணியிடம் கேட்டார்.. இது தம்பதிக்குள் தகராறாக வெடித்துள்ளது.. நேரில் வந்து இதை பற்றி பேசுகிறேன் என்று சொல்லி, போனை வைத்துவிட்டார் முரளிகிருஷ்ணா..

அதன்படியே, நேற்று முன்தினம் சேலத்திற்கு பைக்கில் வந்திருக்கிறார் முரளிகிருஷ்ணா.. கோகிலாவாணிக்கு போன் செய்து, புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வரசொன்னார்.. காலேஜில் இருந்து கோகிலாவாணியும் பஸ் ஸ்டாண்டுக்கு சென்றதும், அவரை பைக்கில் ஏற்றி சென்றுள்ளார் முரளிகிருஷ்ணா.

காட்டுப்பகுதி: இந்த பிரச்சனை தொடர்பாக, தனியாக உட்கார்ந்து பேசி ஒரு முடிவெடுத்துவிடலாம் என்று சொல்லி காடையாம்பட்டி அருகே ஜோடுகுளி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.. அப்போது, இளைஞர் தொடர்பான பிரச்சனை மறுபடியும் வெடித்தது.. எதிர்பார்த்ததைபோலவே, தகராறு முற்றவும், கையோடு கொண்டுபோயிருந்த கத்தியை எடுத்து, கோகிலாவாணியின் கழுத்தை குத்தினார் முரளிகிருஷ்ணா..

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார் கோகிலவாணி.. அப்போதும் ஆத்திரம் தீராத முரளிகிருஷ்ணா, கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து, தலையிலேயே தூக்கி போட்டார். இதில், அந்த பெண்ணின் முகமெல்லாம் சிதைந்துவிட்டது.. பிறகு கேனில் எடுத்து சென்றிருந்த பெட்ரோலை எடுத்து, முகத்தில் ஊற்றி தீ வைத்துவிட்டு, கிளம்பி சென்றுள்ளார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, முரளிகிருஷ்ணாவை போலீசார் கைது செய்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

அம்மா அதிர்ச்சி: ஜோடுகுளி பகுதியை சேர்ந்தவர்கள், நேற்று சாயங்காலம்தான், அந்த காட்டு பகுதிக்கு ஆடுகளை மேய்ப்பதற்காக சென்றிருக்கிறார்கள்.. அப்போதுதான் சடலத்தை பார்த்துள்ளனர்..

இதனிடையே, கோகிலாவாணி கொலைசெய்துவிட்டு, பெங்களூருவுக்கு தப்பிச்சென்ற முரளி கிருஷ்ணா, நடந்த சம்பவத்தை எல்லாம் தன்னுடைய அம்மாவிடம் சொன்னாராம்.. பிறகு தன்னுடைய அம்மாவையே துணைக்கு அழைத்துக்கொண்டு, மகனை தீவெட்டிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் தானாகவே வந்து சரணடைந்துவிட்டாராம் முளிகிருஷ்ணா.

ஸ்க்ரூ: முதலில், கத்தியால் கோகிலவாணியை குத்தியதாக தகவல் வெளியானது.. ஆனால், பைக்கில் ஸ்குரு கழற்ற பயன்படுத்தும், கூர்மையான பொருளை கொண்டு, கோகிலவாணி கழுத்தில் குத்தியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த கோகிலவாணி, உயிருக்கு போராடி கொண்டிருந்தாராம்.. அப்படி இருந்தும் ஆத்திரம் தீராத முரளிகிருஷ்ணன், பைக்கில் பெட்ரோல் டியூப்பை கழற்றி பெட்ரோலை கோகிலவாணி மீது ஊற்றி எரித்துவிட்டு ஓடிவிட்டாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+