மாணவர்கள் காலில் சட்டென விழுந்து மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ அருள்.. பரபரத்த சேலம்
சேலம்: சேலம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் திமுகவினரும் பாமகவினரும் மோதிக்கொண்டனர். இந்த வேளையில் பாமக எம்எல்ஏ அருள் மாணவ-மாணவிகளின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மேற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அருள். பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்தவர். இவரது தொகுதிக்குட்பட்ட பகுதி பாகல்பட்டி. இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் எம்எல்ஏ அருள் பங்கேற்றார். அப்போது திமுக நிர்வாகிகள் சிலர் அருளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவ-மாணவிகளுக்கு அவரை சைக்கிள் கொடுக்க விடாமல் செய்ததோடு, அவரை பேச விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது ‛‛மாணவர்களுக்கு நாங்களே சைக்கிளை கொடுத்து விடுகிறோம். நீங்கள் தர வேண்டாம்'' என திமுகவினர் கூறியுள்ளனர். அதற்கு அருள் எம்எல்ஏ, ‛‛இது எனது தொகுதி. இதனால் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும் உரிமை உள்ளது'' எனக்கூறியுள்ளார். இதையடுத்து இருத்தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். மாணவர்கள் பதறிப்போயினர். இதையடுத்து இருதரப்பையும் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து எம்எல்ஏ அருள் விழாவில் பேசினார்.
அப்போது , ‛‛நான் மாணவர்களிடம் உரையாடத்தான் வந்தேன். அரசியல் செய்ய வரவில்லை. ஒழுக்கத்தை கற்கும் இடத்தில் உங்களை அசிங்கப்படுத்திவிட்டார்கள். அவர்களுக்கும் சேர்த்தே காலில் விழுகிறேன்'' என வருத்தம் தெரிவித்தார் அருள் எம்எல்ஏ. மேலும் தான் வைத்து பேசிய மைக்கை அருகே இருந்தவரிடம் கொடுத்துவிட்டு தரையில் படுத்து மன்னிப்பு கேட்க முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயன்றனர்.
இருப்பினும் அருள் எம்எல்ஏ அவர்களை மீறி தரையில் படுத்து மாணவ-மாணவிகளை நோக்கி கைகளை கூப்பி மன்னிப்பு கோரினார். 2 முறை இப்படி செய்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த வேளையில் பதறிப்போன மாணவ-மாணவிகள் தாங்கள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications